ரேஷ்மா பசுபுலேட்டி செய்த வேலை.. ஊசி போட்டு கண்டபடி வீங்கிருச்சு.. பயில்வான் விளாசல்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் அண்மையில் உதட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுகுறித்து நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வரும் நிலையில், சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன், இதுகுறித்த வீடியோ ஒன்றில் பேசி உள்ளார்.

சின்னத்திரையில் அடுத்தடுத்து சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த ரேஷ்மா பசுபுலேட்டி. சூரி, விஸ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்கிற விவகாரமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார். அந்த படத்திற்கு பிறகு யாருப்பா இந்த புஷ்பா என்று ரசிகர்கள் பலர் இணையத்தில் தேடத் தொடங்கினார்கள். அந்த படத்திற்கு பின் விஜய் டிவியில் பாக்யலட்சுமி சிரீயலில் கோபியிடம் ஏமாந்து போகும் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தார்.

Reshma pasupuleti Bayilvan Ranganathan

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி: அதன்பின் பாக்கியலட்சுமி சீரியலில் கதை போக போக வில்லியாக மாறிய இவர். தற்போது கோபியை மிரட்டு மிரட்டு என்று மிரட்டி வருகிறார். இந்த சீரியல் மட்டுமில்லாமல், ஜீ தமிழில் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர், உதடு சர்ஜரி செய்து கொண்டார். இதனால், அவர் உதடு பெரியதாகிவிட்டதாகவும், அது அவருக்கு பொருந்தவில்லை எனவும் நெட்டிசன்கள் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

தேவையா இது: இதுகுறித்து, பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், சினிமாவில் கண்ணு சரியில்லை, மூக்கு சரியில்லை , வாய் சரியில்லை என்றால் அறுவை சிகிச்சை செய்து கொள்வது வழக்கம் தான். அப்படித்தான் நடிகை ரேஷ்மாவிடம் யாரே உதடு சிறியதாக இருக்கிறது என்று சொல்ல அவரும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அதன்பிறகு அவரின் உதடு பெரிதாகிவிட்டதால், பலர் அவரை விமர்சித்து வருகின்றனர். நடிகை ஸ்ரீ தேவி மூக்கு சரியில்லை என்று அறுவை சிகிக்சை செய்து கொண்டார். அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு தான் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தன. இதனால் அவர் மன அழுத்தத்திற்கு சென்றார் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

அது என் இஷ்டம்: இதுகுறித்து சர்ச்சைக்கு நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, அண்மையில் விளக்கம் அளித்தார். அதில், நிறைய பேர் நான் உதட்டுக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பதாக கூறுகின்றனர். முதலில் இது அறுவை சிகிச்சை இல்லை, அதற்கு பெயர் லிப் ஃபில்லர்ஸ். இன்றைய காலக்கட்டத்தில் இது மிகவும் சாதாரணமாக மாறி விட்டது. ஆனால் நடிகைகள் செய்வது தான் வெளியில் அதிகம் பேசப்படுகிறது. நான் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டால் அது என்னுடைய விருப்பம். எனக்கு பிடித்தபடி நான் இருக்கிறேன், இதில் யாருக்கு என்ன பிரச்சனை.

கடுமையாக உழைக்கிறேன்: நிறைய பேர் என்னை குண்டு குண்டு என்று கிண்டல் செய்கின்றனர். எனக்கு இருக்கும் உடல் பிரச்சனை பற்றி அவர்களுக்கு தெரியாது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு என் உடல் மொத்தமும் மாறிவிட்டது. மேலும், தூக்கம் இல்லாமல் கடுமையாக உழைக்கிறேன். ஓய்வு எடுக்க நேரம் இல்லை, அதனால் உடல் எடை அதிகரித்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X