சிவராஜ்குமாருக்கு கேன்சர்?.. ஏழைகளுக்கு சொத்தை எழுதி வைத்தாரா?.. உண்மை என்ன?
சென்னை: கன்னட சூப்பர் ஸ்டாரின் மூத்த மகனான சிவராஜ்குமார் தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். விஜய்யின் கடைசி படமான தளபதி 69லும் அவர் நடிக்கவிருந்ததாகவும்; ஆனால் உடல்நிலை காரணமாக அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும் அவருக்கு புற்றுநோய் என்றும் சமீபகாலமாக தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருந்த சூழலில்; தனது சொத்துக்களை ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
கர்நாடக திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார். மேலும் அந்த மாநிலத்தின் முதலமைச்சராகவும் அவர் இருந்தார். சந்தன கடத்தல் வீரப்பன்கூட ராஜ்குமாரை சில மாதங்கள் கடத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமாருக்கு மொத்தம் இரண்டு மகன்கள். மூத்தவர் சிவராஜ்குமார், இளையவர் புனித் ராஜ்குமார். தந்தையை போலவே கர்நாடக திரையுலகிலும், மாநிலத்திலும் தங்களுக்கென பெயரையும், செல்வாக்கையும், புகழையும் நிறைய பெற்றவர்கள் இரண்டு பேரும்.

இரண்டு பேரும் நடிகர்கள்: அதேபோல் இரண்டு பேருமே சாண்டல்வுட்டில் நடிகர்களாகவும் வெளிச்சம் பெற்றவர்கள். புனித் ராஜ்குமாரை ரசிகர்கள் அப்பு என்றும், சிவராஜ்குமாரை சிவாண்ணா என்று அழைப்பதுண்டு. இருவருமே சென்னையில் பிறந்தவர்கள் என்பதும்; தமிழ் மிக அருமையாக பேசுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழ்நாட்டிலும் அவர்களுக்கென்று ரசிகர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
புனித் மரணம்: ஏராளமான படங்களில் நடித்திருக்கும் புனித் ராஜ்குமார் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். உடற்பயிற்சி கூடத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு வந்ததாகவும்; அளவுக்கு மீறி அவர் உடற்பயிற்சியை மேற்கொண்டதன் காரணமாகத்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அவரது மரணம் கர்நாடக திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சிவராஜ்குமார்: சிவராஜ்குமாரை பொறுத்தவரை கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க, தனக்கு ஒரு நோய் இருக்கிறது. ஆனால் அது என்ன நோய் என்று தெரியவில்லை. அதற்காக அமெரிக்கா செல்கிறேன் என்று கூறி அதிர்ச்சி கிளப்பினார் அவர். அதனையடுத்து அவருக்கு புற்றுநோய் வந்துவிட்டதாக வேகமாக தகவல்கள் பரவ தொடங்கின. இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் கோயிலுக்கு சென்று முடி காணிக்கை செலுத்தினார் அவர்.
பயில்வான் பேட்டி: இதற்கிடையே தனக்கு புற்றுநோய் என்பதால் அவர் தனது சொத்துக்களை ஏழை மக்களுக்கு எழுதி வைத்துவிட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவின. இந்நிலையில் அதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசியிருக்கிறார். அதில் அவர், "சிவராஜ்குமாரும், புனித் ராஜ்குமாரும் ரொம்பவே ஃபேமஸான நடிகர்கள். அவர்களில் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்யும் உயிரிழந்துவிட்டார். சிவராஜ்குமார் தேக ஆரோக்கியத்துடன் இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு புற்றுநோய் வந்திருக்கிறது.
அதன் காரணமாக சிகிச்சை பெற அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறார். அதேசமயம் புற்றுநோய் வந்துவிட்டது அதனால் தனது சொத்துக்கள் அனைத்தையும் அவர் ஏழைகளுக்கு எழுதி வைத்துவிட்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால் நாம் விசாரித்தவரை அதெல்லாம் இல்லை. அப்படி வந்தது வெறும் வதந்திதான் என்பது உறுதியாகியிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











