கஸ்தூரி போல ஜெயிலுக்கு போகணுமா? உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை.. சுசித்ராவை விளாசிய பயில்வான்!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா திரைப்படம் 7ந் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே படம் குறித்து மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டு இருந்த நிலையில், ஜோதிகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசி உள்ளார்.
கங்குவா படம் குறித்து வரும் நெட்டிவ் விமர்சனம் குறித்து ஜோதிகா அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், சூர்யாவின் மனைவியாக இல்லை, ஒரு சினிமா ரசிகையா எழுதுகிறேன். முதல் 1/2 மணிநேரம் ஒலி இரைச்சலாக இருக்கிறது. முதல் அரை மணி நேரம் மட்டும்தான் அப்படி இருக்கிறது மொத்த 3 மணி நேரமும் அப்படி இல்லை. கேமரா வேலைபாடுகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காததாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்: இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் NeswTon சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது, அந்த விழாவிலும், ஜோதிகா கலந்துகொள்ளவில்லை. அதேபோல மும்பையிலும் கங்குவா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிலும் ஜோதிகா கலந்து கொள்ளவில்லை. இப்படி எதிலும் கலந்து கொள்ளாத ஜோதிகா. திடீரென்று கங்குவா படம் நல்லா இருக்கு, அந்த படத்தை சில விஷமிகள் தான் விமர்சனம் செய்றாங்க அப்படின்னு சொல்லி இருக்காங்களே அதுல எந்த வகையில நியாயம் இருக்கிறது.
சூர்யா மீது அக்கறை இல்லை: இவர் சொல்லுவது போல யாரும் படத்தை விமர்சனம் செய்யல, ஒரு சிலர் மட்டும்தான் கங்குவா படம் சரியில்லன்னு விமர்சனம் செய்தார்கள். மத்தவங்க எல்லாருமே படம் நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க. ஆனால் ஜோதிகா மட்டும்தான் அந்த அறிக்கையில் அரை மணி நேரம் படம் நல்லா இல்ல, அப்படின்னு அவங்களே ஒரு ஸ்டேட்மெண்ட்ட கொடுத்து இருக்காங்க மற்றவர்கள் யாரும் சொல்லாத விஷயத்தை சொன்னதே ஜோதிகா தான். மாமனாரோடு சண்டை என்பதால் சென்னையில் நடந்த ப்ரமோஷனுக்கு வரவில்லை ஆனால் மும்பையில் நடந்த ப்ரோமோஷனில் கலந்து கொண்டிருக்கலாமே, உண்மையில் ஜோதிகாவிற்கு சூர்யாவின் மீது அக்கறை இருந்திருந்தால் நிச்சயம் அந்த பிரமோஷனில் கலந்து கொண்டிருப்பார். இதில் இருந்து ஜோதிகாவிற்கு சூர்யா மீது அக்கறை இல்லை.
யாரு பிச்சைக்காரி: இது ஒரு பிரச்சனை இருக்க சர்ச்சை நாயகி என பெயர் எடுத்த சுசித்ரா, இந்த விஷயத்தில் ஜோதிகாவை கண்டபடி திட்டி வருகிறார்.எந்த வகையில் கங்குவாவிற்கும் சுசித்ராவிற்கும் தொடர்பு இருக்கிறது.ஏன் தேவையில்லாத வேலையை செய்கிறீர்கள். ஜோதிகா பெரிய நடிகை,மும்பையில் பல கோடி சொத்து, சென்னையில் பல கோடி சொத்து இருக்கும் ஜோதிகாவை பிச்சைக்காரி என்று சுசித்ரா சொல்லி இருக்கிறார். இதுகுறித்து ஜோதிகா வழக்கு தொடர்ந்தால், கஸ்தூரி போல சுசித்ராவும் ஜெயிலுக்கு போக வேண்டியதுதான். யாரின் பிரச்சனைக்கும் போகாமல் சூர்யாவின் குடும்பம் ரொம்ப அமைதியாக இருக்கிறார்கள். இவர்களின் குடும்பம் குறித்து பேசுவது சுசித்ராவிற்கு தேவையில்லாத வேலை, ஒரு மனநோயாளிதான் இப்படி எல்லாம் பேசுவார். என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











