சிவாஜி குடும்பத்தில் மோதல்.. பேரனால் குடும்பத்திற்கு வந்த அவமானம்.. பயில்வான் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் ஜெகஜால கில்லாடி என்ற படம் தயாரித்தார். இந்தப் பட தயாரிப்பு பணிக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராததால், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்திற்கு அவகாசம் கேட்டுக்கூட இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என கூறி, நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இது சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன்,சிவாஜியின் பேரனால், இந்த குடும்பத்திற்கு இந்த அவமானம் வந்துள்ளது என்றார்.

Sivaji Ganesan House Confiscated Bayilvan Ranganathan

பயில்வான் ரங்கநாதன்: தொடர்ந்து பேசிய பயில்வான் ரங்கநாதன், நடிகர் சிவாஜி கணேசன் அவரது தயாரிப்பின் மூலம் இரண்டு, மூன்று படங்களை தயாரித்தார். அந்த பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனால், கடைசியாக ரஜினியை வைத்து மன்னன் படத்தை தயாரித்தார். இந்த படம் தான் லாபத்தை கொடுத்தது அதன் பிறகு சிவாஜி படத்தை தயாரிப்பதை நிறுத்தி விட்டார். பிரபு படத்தை தயாரித்தார், அவரது சகோதரர் ராம்குமார் அவரது மகன் துஷ்யந்த் என அனைவரும் படத்தை தயாரித்தனர். துஷ்யந்த் தயாரித்த படம் தான் ஜெகஜால கில்லாடி. இந்த படத்திற்காக மூன்று கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார்கள். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்த நிறுவனம் நீதிமன்றம் சென்று படத்தின் உரிமையை தரும்படி கேட்டது. ஆனால் அதற்கு துஷ்யந்த் மறுத்துவிட்டார்

குடும்பத்தில் பிரச்சனை: குடும்பத்தில் நடக்கும் பிரச்சனை: தற்போது படத்தின் கடன் ஒன்பது கோடி ரூபாயாக ஆகிவிட்டது இது குறித்து உயர் நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், துஷ்யந்த் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் ஒன்பது கோடி ரூபாயை தர வேண்டும் இல்லை என்றால் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமில்லை, ஏற்கனவே சிவாஜிகணேசனின் மகள்கள், பிரபுவும் ராம்குமாரும் தந்தையின் சொத்தை பிரித்து தரவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். இந்த வழக்கு சில ஆண்டுகள் நடைபெற்ற நிலையில். தற்போது பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக சொத்து பிரிக்கப்பட்டதாக தகவல் வெளியான அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

பெரும் அவமானம்: சிவாஜி குடும்பத்திற்கு வந்த அவமானம்: ராம்குமாரும் துஷ்யந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகி, இதற்கு சரியான விளக்கம் கொடுத்திருந்தால் சிவாஜி குடும்பத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அவமானம் வந்திருக்காது. நடிகர் பிரபு அவரின் மகன் விக்ரம் பிரபு இருவருமே சினிமாவில் நடித்து சம்பாதித்து வருகிறார்கள். ஆனால் ராம்குமார் அவரது மகனும் என்ன தொழில் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. தாயா பிள்ளையான இருந்தாலும், வாயும் வயிறும் வேற தானே, சிவாஜி கணேசன் பல திரைப்படங்களில் கஷ்டப்பட்டு நடித்தது, பல கோடி சொத்துக்களை சேர்த்து வைத்து சென்று விட்டார். அவர் உயிரோடு இருக்கும் போதே உயில் எழுதி வைத்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X