சிவக்குமார் சூர்யாவை பிரித்த ஜோதிகா.. மும்பையில் செட்டிலாக காரணம் இதுதான்.. பயில்வான் தகவல்!
சென்னை: நடிகர் சிவக்குமார் ஹீரோவாகவும் குணச்சித்திர கேரக்டர்களிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர். தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். இவரது மகன் சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அப்பாவை பிரிந்து மும்பையில் செட்டிலாகி உள்ளார்.
இதுகுறித்து யூடியூப் சேனலில் பயில்வான் ரங்கநாதன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் பலரை திருமணம் செய்து கொள்வார்கள், கிசு கிசுவில் சிக்குவார்கள் ஆனால், நடிகர் சிவக்குமார் முற்றிலும் மாறுபட்டவர். நிறைய நடிகைகளுடன் ஜோடியாக நடித்தாலும், சிவக்குமாருக்கு படத்தில் மட்டும் தான் நடிகை மீது காதல் வந்ததே தவிர வாழ்க்கையில் வந்தது இல்லை. அம்மாவுடைய பேச்சை கேட்கும் சிவகுமார் அந்த அடிப்படையில அம்மா பார்த்த, அவருடைய ஊருக்கு அருகில், தனது சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணத்தில் பத்திரிக்கையாளர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டேன்.

ஜெயலலிதா தலைமையில் திருமணம்: அவர் தீவிரமாக யோகாசனம் செய்வார் இந்த வயதிலும் அவர் இளமையோடு இருக்க அது மிக முக்கிய காரணம் ஆகும். எம்ஜிஆர், ஜெயலலிதா என அனைவருக்கும் நெருங்கிய நண்பர். வழக்கமாக எந்த நடிகர் வீட்டு திருமணத்திற்கும் போகாத ஜெயலலிதா, சூர்யாவிற்கு பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 3.45 மணிக்கு நடந்த திருமணத்தில் தாலி எடுத்து கொடுத்தார். திருமணத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டதால், கருணாநிதி வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடிகர் சிவக்குமாருக்கு அபரிமிதமான ஞாபகசக்தி திருக்குறள், திருவாசகம், ராமாயணம் என அனைத்தையும் பேசுவார் அவருடைய பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
மும்பையில் செட்டில்: யானைக்கும் அடிசறுக்கும் என்பது போல போட்டோ எடுக்க வந்த ரசிகரின் போனை தூக்கி வீசினார். அதே போல சால்வை போடவந்தவரிடம் கோபப்பட்டார். இது இணையத்தில் பேசுபொருளானது. இந்த இரண்டு பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தார் சிவகுமார். அதே போல சிவக்குமாருக்கும் ஜோதிகாவிற்கு பிரச்சனை ஏற்பட்டு ஜோதிகா சூர்யாவுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதை மறுத்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தில் நான் நடிக்க மாமனாரிடம் அனுமதி கேட்டேன். அதே போல, குழந்தைகளின் படிப்பிற்காகத்தான் மும்பைக்கு வந்து இருக்கிறோம். அது முடிந்ததும் சென்னையில் செட்டிலாகிவிடுவோம் என்று கூறியுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருது: அதே போல, சூர்யாவும் படப்பிடிப்புக்கு சென்னை வந்தால், அப்பா வீட்டில் தான் தங்கி சாப்பிடுவதாக சொல்லப்படுகிறது. எது எப்படியோ அழகான கூட்டு குடும்பமாக இருந்தது இப்போது இல்லை, விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வருவது போல உடைந்துவிட்டது. இனிமேல் எட்டி இருந்தால் மரியாதையாக இருக்கும் என்று பேசியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். இதைத் தொடர்ந்து 36 வயதினிலே படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவிற்கு கிடைத்துள்ளது. இது சிவக்குமாருக்கு கிடைத்த பெருமை என்றார்.


Click it and Unblock the Notifications











