Tamannaah - தமன்னா என்ன மூதாட்டியா?.. நெல்சன் ஏன் ஜெயிலரில் வைத்தார் தெரியுமா? - பயில்வான் ரங்கநாதன்
சென்னை: Tamannaah (தமன்னா) நடிகை தமன்னாவை ஜெயிலர் படத்தில் நெல்சன் திலீப்குமார் ஏன் பயன்படுத்தினார் என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹிந்தியில் அறிமுகமானாலும் தமிழ்தான் அவருக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது விஜய் அஜித் சூர்யா கார்த்தி ஜெயம் ரவி என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் ஒரு காலத்தில் தமன்னாவின் அலை கோலிவுட்டில் பலமாகவே அடித்தது.

விலகிய சிம்பு?: குறிப்பாக கே.வி.ஆனந்த் இயக்கிய கோ என்ற படத்தில் சிம்புதான் முதலில் நடிக்க வேண்டி இருந்தது அந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்தால் மட்டும்தான் தான் நடிப்பேன் என அவர் கூறி படத்தில் இருந்து விலகியதாகவும் ஒரு தகவல் உலாவியது குறிப்பிடத்தக்கது. எனவே இன்னும் பல வருடங்கள் அவர் கோலிவுட்டை ஆட்சி செய்வார் என பலரும் கணித்தனர். இடையில் என்ன நடந்ததோ அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
தெலுங்கிலும் டல்: தமிழில் எப்படி இருந்தாரோ அதேபோல்தான் தெலுங்கிலும் வெற்றி கொடியை பறக்க விட்டவர் தமன்னா. அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. கோலிவுட், டோலிவுட் என இரண்டு சினிமா துறையும் கைவிட்டாலும் அவருக்கு ஹிந்தி சினிமா கை கொடுத்தது அதன்படி அங்கு அவர் நடித்த படங்களும் வெப் சீரிஸ்களும் ஹிட் அடித்துள்ளன. அதேபோல் அங்கு அவர் தனது கிளாமரை கொஞ்சம் அதிகரித்திருக்க ஆரம்பித்திருக்கிறார்.

தமன்னாவின் காதல்: அதேபோல் லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்தார். அதனை இரண்டு பேருமே உறுதி செய்திருக்கின்றனர். மேலும் இரண்டு பேரின் திருமணமும் விரைவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமன்னா, விஜய் வர்மா எனக்காகவே படைக்கப்பட்டவர் போல் இருக்கிறார் என உச்சக்கட்ட மகிழ்ச்சியோடு தெரிவித்திருந்தார்.
ஜெயிலர்: இந்த சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னாவும் நடித்திருக்கிறார் அதில் அவருக்கு சிறிய வேடம் தான் என்றாலும் காவலாபாடலின் மூலம் மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டார் அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா ஷங்கர் படத்தில் நடித்திருக்கிறார். இதில் ஜெயிலர் ஆகஸ்ட் 10ஆம் தேதியும், போலா ஷங்கர் 11ஆம் தேதியும் வெளியாகிறது. எனவே கோலிவுட்டில் அவர் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் சர்ச்சைகளை பற்றவைக்கும் பயில்வான் ரங்கநாதன் தமன்னா குறித்து பேசி இருக்கிறார். அவர் பேசிய வீடியோவில், "ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்த தமன்னா தாறுமாறான கிளாமரில் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டதற்கு அதிகளவில் சம்பளத்தை வாங்கியிருக்கிறார்.

ஏன் பயன்படுத்தினார் நெல்சன்?: ஹிந்தியில் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜீ கர்தா, லச்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவைகளில் அவர் ஆபாசத்தின் உச்சத்துக்கே சென்றிருந்தார். அதே மூடுடன் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் தமன்னாவை பயன்படுத்தியிருக்கிறார். எது ட்ரெண்டிங்கோ அதை பிடித்துக்கொள்வதுதான் சினிமா. யாருக்கு மவுசோ அவருக்குத்தான் அதிகம் சம்பளம். தமன்னா என்ன மூதாட்டியா இந்த வயதில் காட்டாமல் எந்த வயதில் காட்டப்போகிறார்" என பேசியிருக்கிறார். அவரது இந்த கொச்சைப் பேச்சு பலரிடமும் கண்டனத்தை எழுப்பியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











