Tamannaah - பணத்தை வாங்கிக்கொண்டு ஆபாச போஸ் கொடுத்தார் தமன்னா.. பயில்வான் ரங்கநாதன் அலப்பறை
சென்னை: Tamannaah (தமன்னா) நடிகை பணம் வாங்கிக்கொண்டு ஆபாச போஸ் கொடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா. கேடி படத்தின் மூலம் அறிமுகமான அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருடன் ஜோடி போட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பீக்கில் இருந்த அவருக்கு தென்னிந்திய திரையுலகத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனையடுத்து ஹிந்தி பக்கம் சென்றார் அவர்.

ஹிந்தியில் ஹிட்: ஹிந்திக்கு சென்ற அவருக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. அங்கு அவர் நடித்த பிளான் ஏ பிளான் பி, லஸ்ட் ஸ்டோரிஸ் ஆந்தாலஜி, ஜீ கர்தா வெப் சீரிஸ் ஆகியவை ஹிட்டடித்தன. மேலும் சில ஹிந்தி படங்களில் நடிப்பதற்கும் அவர் கமிட்டாகியிருக்கிறார். இதனால் பாலிவுட்டில் பிஸியான ஹீரோயினாக வலம் வரும் அவர் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழில் ரீ என் ட்ரி கொடுத்தார்.
காவாலா: ஜெயிலர் படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளில் தோன்றிய அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதிலும் காவாலா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் பலரையும் கவர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது. அதேசமயம் அவரது நடனத்தில் ஆபாச தொனி இருப்பதாகவும் சில விமர்சனங்கள் எழத்தான் செய்தன. தமிழில் அவர் அரண்மனை 4 படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
காதல்: இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது உடன் நடித்த விஜய் வர்மாவை காதலிக்க தொடங்கியிருக்கிறார் தம்மு. அந்தக் காதலை இரண்டு பேரும் சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தனர். மேலும் விரைவில் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்களாம். இரண்டு குடும்பத்தினரும் போடும் அழுத்தத்தால் இன்னும் சில மாதங்களில் அவர்களது திருமணம் நடக்கலாம் என பாலிவுட் பச்சிகள் கூறுகின்றன.
பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் தமன்னா குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "தமன்னா நிறைய பணம் வாங்கிக்கொண்டு பத்திரிகைக்கு ஆபாச போஸ் கொடுத்திருக்கிறார். எனது கணவரின் அனுமதியோடுதான் இதனை செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். கணவர் என்றால் இன்னும் திருமணம் ஆகவில்லை.
விஜய் வர்மாவை காதலித்துவருகிறார். இருவரும் இணைந்திருக்கும் பல ஃபோட்டோக்களை வெளியிட்டனர். கண்டிப்பாக விஜய் வர்மாவும், தமன்னாவும் திருமணம் செய்துகொள்வார்கள். மார்க்கெட் இருக்கும்போதே பணம் சம்பாதித்துவிட்டு சினிமாவிலிருந்து ஒதுங்கலாம் என்ற முடிவில் இருக்கிறார் தமன்னா. அதற்கு விஜய் வர்மாவும் ஒத்துக்கொண்டார்" என்றார். முன்னதாக நடிகை தமன்னா க்ளோபல் ஸ்பா இந்தியா என்ற பத்திரிகையின் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











