அமீருக்கு துரோகம் செய்ததா சூர்யா குடும்பம்? பயில்வான் ரங்கநாதன் சொல்வது என்ன?

சென்னை: இயக்குநர் அமீருக்கு சூர்யா குடும்பம் துரோகம் செய்துவிட்டது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கிறார்.

Bayilvan Ranganathan talks about the reason for Karthi and Ameers fight

இவர் நடிப்பில் வெளியான கைதி, பொன்னியின் செல்வன், சர்தார் போன்ற படங்கள் இவரின் நடிப்புக்கு தீனி போடும் படங்களாக இருந்தன.

கார்த்தி 25வது படம்: நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரைப்படத்தின் இசைவெளியிட்டு விழா நடைபெற்றது. இது கார்த்தியின் 25வது படம் என்பதால், கார்த்தி நடித்த படங்களில் இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டு பேசினார்கள். ஆனால், இந்த படத்தில் கார்த்தியின் சினிமா வாழ்க்கை தொடங்க காரணமாக இருந்த இயக்குனர் அமீரை அழைக்கவில்லை.

பயில்வான் ரங்கநாதன்: இதுகுறித்து பேட்டி அளித்த அமீர், சூர்யா குடும்பம் குறித்து பல பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ள நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்கு துணையாக இருந்தவர் இயக்குநர் அமீர்.

குடும்ப நண்பர்: சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தில் எப்படி நடிக்க வேண்டும், முக பாவனை, டான்ஸ் என அனைத்தையும் சொல்லிக்கொடுத்தது இயக்குநர் அமீர் தான். அந்த படத்தில் இருந்து அமீர் சூர்யாவின் குடும்ப நண்பராக மாறிவிட்டார்.

அப்போதே பிரச்சனை: அமீரின் இயக்கத்தின் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக தனது தம்பி கார்த்தி சினிமாவில் நாயகனாக அறிமுகம் பெற அமீர் தான் இயக்குனராக வேண்டுமென முடிவில் உறுதியாக இருந்தார். ஆனால், கார்த்தி வெளிநாட்டில் படித்துவிட்டு வெள்ளையாக இருந்ததால், பருத்திவீரன் படத்திற்காக அவரை பல நாட்கள் வெயிலில் நிற்க வைத்தார். இதைப்பார்த்து சிவக்குமார் கதறி அழுதார். அப்போதே சலசலப்பு ஏற்பட்டது.

பணப்பிரச்சனை: அமீர் தனது சொந்த தயாரிப்பில் பருத்திவீரன் படத்தை தயாரித்தார். ஆனால், படம் நன்றாக இருந்ததால், ஸ்டூடியோகிரின் நிறுவனத்தின் பெயரில் வெளியிட முன் வந்தார் ஞானவேல் ராஜா. படம் வெற்றிகரமாக ஓடி வசூலை பெற்ற போதும், பேசியபடி அமீருக்கு பணத்தை தராததால் பிரச்சனை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஞானவேல் ராஜா சூர்யா குடும்பத்திற்கு தூரத்து சொந்தம் என்பதால், சூர்யா, கார்த்தியை வைத்து தயாரிப்பாளராக மாறிவிட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X