உங்க Wife ஐவிட நான் அழகா?.. பார்த்திபனிடம் இப்படி கேட்டாரா பிரபல நடிகை?.. பற்றவைத்த பயில்வான்
சென்னை: திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு புதிய பாதை மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பார்த்திபன். முதல் படத்திலேயே கதாநாயகனாகவும் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சீதா நடித்தார். மேலும் அந்தப் படத்தில் மனோரமா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படமும் தேசிய விருதை பெற்றது. அன்றிலிருந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார் பார்த்திபன். இந்தச் சூழலில் அவர் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன். படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுவதில் பார்த்திபன் வல்லவர். இவர் இயக்கிய குடைக்குள் மழை, ஹவுஸ்புல், உள்ளே வெளியே உள்ளிட்ட பல படங்கள் அந்த வகையை சேர்ந்தவை. இருப்பினும் இயக்குநராக அவர் இயக்கிய பல படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாதவை. இதனால் சில காலம் இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்த பார்த்திபன் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

நடிப்பில் மிரட்டிய பார்த்திபன்: நடிப்பில் கவனம் செலுத்த பார்த்திபனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் . செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வெளியான அந்தப் படத்தில் சோழ மன்னர் கதாபாத்திரத்தில் தோன்றிய பார்த்திபனை பார்த்து அனைவருமே மிரண்டுதான் போனார்கள். அந்த அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்தை கனகச்சிதமாக செய்திருந்தார் பார்த்திபன். சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கதையே இல்லாமல் ஒரு படம்: இந்தச் சூழலில் சில காலம் இயக்கத்துக்கு முழுக்கு போட்டிருந்த பார்த்திபன் இயக்குநராக கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படமானது கதையே இல்லாமல் உருவான படம். அஞ்சான் படத்தோடு ரிலீஸான கதை திரைக்கதை வசனம் இயக்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் கொடுத்த உற்சாகத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அவர் இயக்கிய ஒத்த செருப்பு, இரவின் நிழல் ஆகிய படங்களும் சுமாரான வரவேற்பைப் பெற்றன.
விவாகரத்து: இதற்கிடையே பார்த்திபன் புதிய பாதை படத்தில் நடித்தபோது தனக்கு ஹீரோயினாக நடித்த சீதாவை காதலித்தார். சில காலம் காதலித்த அவர்கள் திருமணமும் செய்துகொண்டார்கள். நன்றாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. அதற்கான காரணத்தை இரண்டு பேரும் இதுவரை ஓபனாக சொல்லவில்லை. இருந்தாலும் அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்படுகின்றன. இந்தச் சூழலில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விவாகரத்துக்கு காரணம்: பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "காதலித்து திருமணம் செய்துகொள்ளும் நடிகர் - நடிகைகளுக்கு ஏன் அதிகம் விவாகரத்து நடப்பதாக அவர்களிடமே கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள் சூசகமாக சொல்வது என்னவென்றால், 'திருமணம் செய்துகொண்ட பிறகு நடிகை ஹவுஸ் வைஃபாக இருக்க வேண்டும்' என்பதுதான். நடிகைகள் அப்படி இருந்துகொள்கிறார்கள். ஆனால் நடிகர்களோ திருமணம் ஆன பிறகும் மற்ற பெண்களுடன் சரசம் செய்கிறார்கள். அதை ஒரு பெண் எப்படி ஏற்றுக்கொள்வார்.
தூது விட்ட பார்த்திபன்?: சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பார்த்திபன். ஆனால் நடிகை சௌந்தர்யாவுடன் பார்த்திபன் நடிக்கும்போது அவருக்கு தூது விட்டார். உடனே சௌந்தர்யா இந்த விஷயத்தை சீதாவிடம் சொல்லிவிட்டார். அதுமட்டுமில்லாமல் பார்த்திபனிடம் சௌந்தர்யா, உங்கள் மனைவியே அழகாகத்தானே இருக்கிறார். அவரைவிட நான் அழகில் உயர்ந்தவளா என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். இங்கிருந்துதான் பார்த்திபன் - சீதா பிரிவு ஆரம்பித்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











