நிக்கோலாய் அப்படி இருக்க காரணம் சொன்னாரா வரலட்சுமி?.. பயில்வான் ரங்கநாதன் ஷேரிங்ஸ்

சென்னை: வரலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் படு பிரமாண்டமாக நடைபெற்றது. அதனையடுத்து சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்போது அவர்கள் காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகின்றனர். இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்தார். மும்பையில் நிக்கோலாய் ஆர்ட் கேலரி ஒன்றை வைத்துவருகிறார். பெரும் கோடீஸ்வரரான அவருக்கு மும்பையில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. தொழிலதிபர்கள், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என அனைவருடனுமே நல்ல பழக்கம் இருக்கிறது. அவரது தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ட் கேலரியை நிக்கோலாய் திறம்பட கையாண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

nicholai varalakshmi bayilvan ranganathan

திருமணமாகி விவாகரத்து: நிக்கோலாய் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். ஆனால் சில காரணங்களால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க வரலட்சுமியின் காதல் குறித்து சரத்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரியவந்ததை அடுத்து க்ரீன் சிக்னல் கொடுத்தனர்.

திருமணம்: கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தில் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது.அதில் இரு வீட்டாரும், உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டார்கள். திருமணத்தை தாய்லாந்தில் முடித்துவிட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார்கள். அந்த ரிசப்ஷனுக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களும் ட்ரெண்டாகின.

ஹனிமூன்: திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூனுக்கும் சென்றிருந்தனர். இதற்கிடையே இவர்களது திருமண செலவு மட்டும் 850 கோடி ரூபாய் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து விளக்கமளித்த சரத்குமார், "எனது மகள் திருமணத்துக்கு 800 கோடி ரூபாய்வரை செலவு ஆகியிருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அந்த செய்தி முற்றிலும் தவறானது" என்று கூறியிருந்தார். மேலும் வரலட்சுமியோடு செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய நிக்கோலாய், எனது பெயரோடு நான் வரலட்சுமியின் பெயரை சேர்த்துக்கொள்வேன் என்று சொல்லியிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இதற்கிடையே நிக்கோலாய் சட்டைப் போடாமல் பனியனோடு அடிக்கடி தென்படுவதை பலரும் ட்ரோல் செய்தார்கள். இந்நிலையில் அதுகுறித்து பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், "உங்கள் கணவர் ஏன் திறந்த மேனியோடு இருக்கிறார். சட்டையே போட மறுக்கிறார் என்று கேட்கப்பட்டதற்கு, 'அவர் ஒரு ஆணழகன். சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். அதனை காட்டுவதற்காகவே அவர் பனியனோடு இருக்கிறார்' என வரலட்சுமி கூறியதாக பயில்வான் தெரிவித்திருக்கிறார். இதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X