வரலட்சுமிக்காக உலக அழகியை விவாகரத்து செய்த மாப்பிள்ளை.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன சீக்ரெட்!
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல், மும்பையில் திடீரென நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ராதிகாவின் மகள் ரேயான் ஆகியோர் கலந்து கொண்டனர். மும்பை தொழிலதிபரான வரலட்சுமியின் வருங்கால கணவரின் முதல் மனைவி உலக அழகி என்ற தகவலை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி, தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். வரலட்சுமிக்கு நடந்த நிச்சயதார்த்தம் குறித்து இணையத்தில் பேசுபொருளாக இருக்கும் நிலையில், இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன்: அதில், வரலட்சுமி சரத்குமார் நிச்சயதார்த்த செய்திதான் இப்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்போது மட்டுமில்லை ஐந்து வருடத்திற்கு முன் விஷால் அளித்த பேட்டியில், லட்சுமிகரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று பேட்டியில் கூறியிருந்தார். விஷால் வரலட்சுமி இருவரும் லிவ்விங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது, நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கும் சரத்குமாருக்கும் மோதல் ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து விட்டார்கள்.
திறமையான நடிகை: நடிகை வரலட்சுமி, அப்பாவைப்போல தைரியமான பெண், ரோட்டில் யாராவது எதாவது செய்தால் அடித்து விடுவார். அந்த அளவிற்கு தைரியமான பெண். அதேபோல வரலட்சுமியின் அம்மா சாயா தேவி, கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்த வந்தாலும், அப்பாவிற்கு அப்பாவாக, அம்மாவிற்கு அம்மாவாக இரண்டு பெண்குழந்தைகளையும் வளர்த்துள்ளார். வரலட்சுமியின் தங்கை பூஜா சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால், வரலட்சுமி கதாநாயகியாக மட்டும் இல்லாமல் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் வில்லியாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார்.
முதல் மனைவி உலக அழகி: தற்போது வரலட்சுமி சரத்குமாருக்கு 39 வயதாகிறது, அதே போல அவரது வருங்கால கணவர் நிகோலாய் சச்தேவ்விற்கு 41 வயதாகிறது. தொழிலதிபரான இவர் மும்பையில் பெரிய ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து இருக்கிறார். அப்பா, அம்மா தொடங்கிய தொழிலை நிகோலாய் நடத்தி வருகிறார். அவருக்கு15 ஆண்டுகளுக்கு முன்பே கவிதா என்பவருடன் திருமணம் நடந்து விட்டது. கவிதா என்பவர் கலிபோர்னியா நாட்டு உலக அழகி ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஏற்கனவே நிகோலாய் சச்தேவ்விற்கும் கவிதாவிற்கும் விவாகரத்து ஆகிவிட்டதால் வரலட்சுமிக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. இருந்தாலும் இவர்களுக்குள் ஈகோ தலைகாட்டாமல் இருந்தால் சரி என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











