டாக்டரே இல்லை.. 4 மணி நேரம் விஜய் ஆண்டனி மகள் உடல் இருந்தது.. பயில்வான் ரங்கநாதன் ஷாக் தகவல்
சென்னை: Vijay Antony Daughter (விஜய் ஆண்டனி மகள்) ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் விஜய் ஆண்டனியின் மகள் உடல் நான்கு மணி நேரம் இருந்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
சுக்ரன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அந்தப் படத்தில் அவர் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இதனையடுத்து ஜீவா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்ததன் மூலம் அடையாளப்பட்டார் விஜய் ஆண்டனி. இருப்பினும் அவரை முன்னணி இசையமைப்பாளர் வரிசையில் அமர வைத்தது காதலில் விழுந்தேன் திரைப்படம்.

ஹீரோவான விஜய் ஆண்டனி: இந்தச் சூழலில் விஜய் ஆண்டனி 'நான்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கனகச்சிதமான நடிப்பை வழங்கிய விஜய் ஆண்டனிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அப்படி அவர் நடித்த 'சலீம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் நடித்த பல படங்களில் பிச்சைக்காரன் மட்டும்தான் ஹிட்டடித்தது. அவரது நடிப்பில் கடைசியாக கொலை படம் வந்தது.
மகள்: விஜய் ஆண்டனிக்கு மீரா என்ற மகள் இருந்தார். அவர் சென்னை சர்ச் பார்க் கான்வெண்ட்டில் 12ஆம் வகுப்பு படித்துவந்தார். அவர் கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் அதற்காக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அது பலரையும் அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறது.
பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் மீராவின் இறப்பு குறித்து பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், "விஜய் ஆண்டனி யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாதவர். புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கக்கூடியவர். இதன் காரணமாகவே பல புதியவர்கள் அவரிடம் கதை சொல்ல போவார்கள். ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறவர்.
அதேபோல் அவரது மனைவி பாத்திமாவை முன்னாடியே நான் அறிவேன். அவர் சன் டிவியில் தொகுப்பாளராக இருந்தபோது என்னை பேட்டி எடுத்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்திருக்கிறார். அதனால் சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார். இன்று அதிகாலை ரூமில் தூக்கு போட்டிருக்கிறார். காலையில் 6 மணிக்கு விஜய் ஆண்டனி மீராவின் கதவை தட்டியதில் திறக்கவில்லை. இதனையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது மீரா இப்படி இருந்திருக்கிறார்.
உடனே அலறியடித்து காரில் மருத்துவமனைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று சொன்னார்கள். அதன் பிறகு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டு சென்றனர். ஆனால் பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்களே அங்கு இல்லை. இதனால் நான்கு மணி நேரம் அங்குதான் மீராவின் உடல் இருந்தது. அதன் பிறகுதான் உடற்கூராய்வு நடந்தது. இதேபோல்தான் எனது நண்பர் ஒருவருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனையில் நிகழ்ந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











