விஜய் அரசியல் வியாபாரியாக மாறிவிட்டாரா? கொந்தளித்த பயில்வான் ரங்கநாதன்!
சென்னை: நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இதற்காக கடந்த வாரம் மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பேசிய புஸ்ஸி ஆனந்த், வேலையே போனாலும் பரவாயில்லை விஜய்யைப் பார்க்க மாநாட்டிற்கு வர வேண்டும் என்று பேசி இருந்தார்.
இது பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், புஸ்ஸி ஆனந்திற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மாநாட்டிற்கு வாருங்கள் என்று தான் அழைக்க வேண்டும். இதைவிட்டு விட்டு, வேலையை விட்டுட்டு வா என்று அவர் எப்படி அழைப்பார். அவருக்கு எதாவது மூளை இருக்கா என்று தெரியவில்லை.

விஜய்யின் நிலைப்பாடு என்ன: புஸ்ஸி ஆனந்த் தலைப்பா கட்டிக்கொண்டு கணபதி பூஜை, ஆயுஷ் பூஜை, பூமி பூஜை செய்தார். அந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளவில்லை. அவர் கிறிஸ்துவர் என்பதால் கலந்து கொள்ளவில்லை என்றும் சிலர் சொல்லுகிறார்கள். அண்மையில், விஜய், அம்மாவின் விருப்பப்படி சாய் பாபாவிற்கு கோயில் கட்டினார். அந்த கோவிலுக்கும் சென்றும் வந்தார், பெரியாரின் பிறந்த நாளுக்கு அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமில்லாமல் நெற்றியில் பொட்டும் வைத்துக்கொண்டார். இதனால் அவரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அரசியல் வியாபாரி: ஒன்னு நாத்திகனாக இரு, இல்லை பெரியாரை பாலோ செய்பவராக இரு. அதுவும் இல்லையா? எம்மதமும் சம்மதம் என்று சொல்லிவிட வேண்டும். அதைவிட்டு விட்டு கடையில் வியாபாரம் ஆக வேண்டும் என்பதற்காக, வியாபாரிகள் அனைத்து கடவுளின் போட்டோக்களை வைத்து இருப்பவர் போல் விஜய் நடந்து கொள்வது சரியா. விஜய் தற்போது ஒரு அரசியல் வியாபாரியாகவே மாறிவிட்டார்.
குழப்பத்தில் தொண்டர்கள்: அதே போல விஜய்யின் கட்சிக்கொடியில் புதிதாக எதுவும் இல்லை, யானை, மஞ்சள், சிவப்பு என இஷ்டத்திற்கு நிறம் இருக்கிறது. கொடி குறித்து, விஜய் அப்பாவிடம் ஆலோசனை கேட்டு இருக்கலாம். அவர் அப்பாவிடமும் யோசனை கேட்கவில்லை. இஷ்டத்திற்கு ஏதோ செய்திருக்கிறார். கட்சி கொடியை யாரும் வீட்டு வாசலில் கட்டக்கூடாது, அப்படி கட்ட வேண்டும் என்றால் முன் அனுமதி வாங்க வேண்டும் என்று, கொடி அறிமுக விழாவில் இஷ்டத்திற்கு பேசி இருக்கிறார் விஜய். இதனால், தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.
ஆர்வத்தில் வந்துவிட்டார்: விஜய் ஏதோ ஒரு ஆர்வத்தில் கட்சி தொடங்கிவிட்டார். ஆனால், அவருக்கு கட்சித்தொடங்குவதற்கான காலம் கனித்துவரவில்லை. நேரம், காலம் வரும் போது தான் அனைத்தும் கைகூடி வரும். அவர் பேசும் சில விஷயத்தை பார்க்கும் போது, அவருக்கு அரசியலில் தெளிவான புரிதல் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. இப்படியே சென்றால் விஜய்யின் கட்சி ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











