விந்தியா விவாகரத்து செய்தது யாரை தெரியுமா?.. காசுக்காக இப்படி பேசலாமா.. பயில்வான் ரங்கநாதன் கேள்வி!

சென்னை: 43 வயதாகும் நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சினிமா பிரபலங்கள் என்றாலே பொதுவாக கொள்கைக்காக பிரச்சாரம் செய்வதில்லை. டப்புக்காகத்தான் பிரச்சாரம் செய்கின்றனர். நடிகை விந்தியாவுக்கு பிரச்சாரமே செய்ய தெரியவில்லை என்றும் கச்சாம் முச்சான் என கண்ட மேனிக்கு பலரை பற்றி பேசி வருகிறார். அவரை பற்றி நான் சொல்லட்டுமா என பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஷ்பு, நமீதா என ஏகப்பட்ட நடிகைகள் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு அடிக்கடி தாவி வருவதாகவும், தேர்தல் பிரச்சார சமயத்தில் அவர்கள் சரியாக பேசாமல் வாய்க்கு வந்தபடி பேசி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Bayilvan Ranganathan talks about Vindhya s divorce details and her ex husband

நமீதா மற்றும் விந்தியா உள்ளிட்டோர் நட்சத்திர பேச்சாளர்களாக பேசுவதே காசுக்காகத்தான் என பயில்வான் ரங்கநாதன் குற்றம்சாட்டிய நிலையில், விந்தியா யாரை திருமணம் செய்துக் கொண்டு எப்படி விவாகரத்து பெற்றார் என அவரது பர்சனல் வாழ்க்கையையும் சீண்டி பேசியுள்ளார்.

கட்சித் தாவும் நடிகைகள்: ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சியில் இருந்துக் கொண்டு நட்சத்திர பேச்சாளர்களாக நடிகைகள் மாறி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பேச்சை கேட்பதை விட நடிகைகளின் பேச்சுக்களை கேட்கவே மக்கள் அதிகம் திரள்கின்றனர். அதனால், பல அரசியல் கட்சிகளும் நட்சத்திர பேச்சாளர்களாக நடிகர்களை விட நடிகைகளை அதிகம் தேர்வு செய்து வருகின்றனர். இது இப்போது அல்ல, அந்த காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

விந்தியா இப்படி பேசலாமா?: சங்கமம் படத்தின் மூலம் 1999ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விந்தியா. திருநெல்வேலி, மகளிருக்காக, உயிரிலே கலந்தது, கண்ணுக்கு கண்ணாக, என் புருஷன் குழந்தை மாதிரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, சார்லி சாப்ளின், நம்ம வீட்டு கல்யாணம், ரெட், வயசு பசங்க, அழகு நிலையம், ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த விந்தியா கடைசியாக 2012ம் ஆண்டு வெளியான வட்டபாறை படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கி விட்டார். ஆனால், இன்னமும் அவர் அரசியல்வாதி மாதிரி பேசவில்லை என்றும் கச்சாம் முச்சான் என பேசுகிறார் என பயில்வான் ரங்கநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

பானுப்பிரியா சகோதர் தான் கணவர்: நடிகை விந்தியா நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் கோபால கிருஷ்ணன் என்பவரை கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், திருமண வாழ்க்கை நடிகை விந்தியாவுக்கு செட் ஆகவில்லை. 2012ம் ஆண்டு கோபால கிருஷ்ணனுடன் சேர்ந்து வாழ முடியாது என விவாகரத்து பெற்றார் விந்தியா. அந்த கதையை பற்றியெல்லாம் நான் சொல்லட்டுமா என பயில்வான் ரங்கநாதன் தனது புதிய வீடியோவில் பேசியுள்ளார்.

25 ஆயிரம் ரூபாய் பணம்: நடிகை விந்தியா நட்சத்திர பேச்சாளராக பேசுவதற்கு அவருக்கு 25 ஆயிரம் சம்பளம் என்றும் அதற்காக இப்படியெல்லாமா? பேசுவீங்க விந்தியா என பயில்வான் ரங்கநாதன் விளாசி உள்ளார். பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக விந்தியாவின் ரசிகர்கள் மற்றும் அரசியல் தொண்டர்கள் பயில்வான் ரங்கநாதனை கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X