ஓடி போய் கல்யாணம் பண்ணா இதுதான் கதி.. ராஜ்கிரண் மகளுக்கு நேர்ந்த கொடுமை..பயில்வான் சொல்வது என்ன!
சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், பிரியா, கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக நேற்று கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து, பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார்.
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முனீஸ்ராஜா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சீரியலில் சம்பந்தம் என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் சீரியலில் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார். இந்த சீரியலை இயக்குனர் திருமுருகன் இயக்கியிருந்தார். நாதஸ்வரம் சீரியலில் இவருடைய பேச்சு மற்றும் ஸ்டைலின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இதை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த நேரத்தில்,நடிகர் ராஜ்கிரனின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் முனீஸ் ராஜாவுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை ராஜ்கிரண் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், என்னுடைய மகள் கிடையாது. வளர்ப்பு மகள் தான். அந்த சின்னத்திரை நடிகர் என்னுடைய பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். எனவே என்னுடைய பெயரை எந்த இடத்திலும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி இருந்தார்.
கண்ணீர் பேட்டி: இதையடுத்து, வளர்ப்பு மகள் பிரியா, வெளியிட்டுள்ள வீடியோவில், நான் 2022ம் ஆண்டு முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன். அந்த கல்யாணத்திற்கு பிறகு, நாங்கள் தற்போது தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில மாதங்கள் ஆகி விட்டன. எங்கள் கல்யாணம் சட்டப்பூர்வமான கல்யாணம் கிடையாது. இந்த கல்யாணத்திற்கு பிறகு, என்னுடைய வளர்ப்பு அப்பாவை நான் மிகவும் காயப்படுத்தி விட்டேன். முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்ட பின், எனக்கு சில பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அந்த நேரங்களில் கூட என்னுடைய வளர்ப்பு அப்பா என்னை கைவிட வில்லை. இது நான் எதிர்பார்க்காத கருணை. நான் எத்தனை முறை மன்னிப்புக்கேட்டாலும் பத்தாது. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அப்பா என கதறி அழுது இருந்தார்.
பயில்வான் ரங்கநாதன் பேச்சு: இதுகுறித்து, வீடியோவில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், இந்த பெண்கள் அப்பா, அம்மாவை விட்டு ஓடுவதும் பின் அவன் சரியில்லை என்று கதறுவதும் வாடிக்கையான விஷயம் தான். பெண்கள் அவ்வளவு சீக்கிரம் காதலிக்கவே மாட்டாங்க ஆனால், அவர்கள் காதலித்துவிட்டடால், அந்த ஆண் நல்லவனா, கெட்டவனா என எதையும் பார்ப்பது இல்லை. ஆண் ஒரு பெண்ணை காதலித்து பிரிந்து போனால், பிரச்சனை இல்லை. ஆனால், ஒரு பெண் காதலில் தோற்றுப்போனால் பெரிய பிரச்சனை. பின் குழந்தையோடு தெருவில் நிற்க வேண்டியது தான்.
ஓடிப்போனால் இதுதான் கதி: பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம் என்றால், நாளை பின் எதாவது பிரச்சனை என்றால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆனால், ஓடிபபோய் கல்யாணம் பண்ணிக்கிட்டா இதுதான் கதி. கடுமையான உழைப்பால் உயர்ந்தவர் ராஜ்கிரண் இவரின் வளர்ப்பு மகள் தான் பிரியா. ராஜ்கிரண் இப்படி ஒரு மகளை வளர்ந்து வருகிறார் என்றே யாருக்கும் தெரியாது. திடீரென்று நடிகர் முனிஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இப்போது, கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டு அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நாங்கள் பிரிந்து விட்டோம், அவர் என்னை டார்ச்சர் செய்தார் என்று சொல்லி இருக்கிறார்.
டார்ச்சர்னா என்ன அர்த்தம்: ஆனால், முனீஸ் ராஜா என்ன டார்ச்சர் செய்தார், ராஜ்கிரணிடம் பணம் கேட்டு வாங்கிவர சொன்னாரா, இல்லை வேறு எதாவது பிரச்சனையா என்று எந்த விவரத்தையும் சரியாக சொல்லவில்லை. இப்படி ஏதாவது சொன்னால் தானே என்ன பிரச்சனை என்று தெரியும், சும்மா பிரிந்து வாழ்கிறோம் என்று சொன்னால் என்ன அர்த்தம், இரண்டு மாதம் பிரிந்து எங்கே இருந்தீங்க என்று தான் கேட்க தோன்றுகிறது. இதற்கு மேலும்,ராஜ்கிரண் வளர்ப்பு மகளை ஏற்றுக்கொள்ள மாட்டார். அதே போல,நடிகர் முனீஸ் ராஜா இதுகுறித்து எந்த வீடியோவும் போடவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











