Ravi Mohan: கெனிஷா குறித்து லிமிட்டை தாண்டி பேசிய பயில்வான் ரங்கநாதன்.. ரவி மோகனுக்கும் விளாசல்!

சென்னை: ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், அவர்களின் விவாகரத்து விவகாரம் குறித்து மற்றவர்கள் விமர்சிப்பதை காட்டிலும், அவர்கள் இருவரும் மாறி மாறி விமர்சித்து வருவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படியான நிலையில், ரவி மோகன் நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. குறிப்பாக கெனிஷா குறித்து விமர்சிக்கும் போது அவர் மோசமாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், " தனது திருமண வாழ்க்கையில் துன்பத்தை மட்டுமே அனுபவித்ததாக சொல்லும் ரவி மோகன் இரண்டு குழந்தைகள் குறித்து என்ன சொல்லப்போகிறார். அவரின் இரண்டு மகன்களும் ஏன் ரவி மோகனுடன் செல்லவில்லை. ஒரு குழந்தைக்கு 12 வயது ஆகிறது, ஒரு குழந்தைக்கு 10 வயது ஆகிறது. கெனிஷாவுடன் இவர் வலம் வருவதைப் பார்த்த குழந்தைகள், 'அப்பா ஏன் இன்னொரு பெண்ணுடன் இருக்கிறார்' என்று கேட்டு சாப்பிடாமல் அழுது கொண்டு இருக்கிறார்கள் என்று ஆர்த்தியின் அம்மா என்னிடத்தில் கூறினார்.

Bayilvan Ranganathan Talks Ravi Mohan Aarti Ravi Divorce Case issue Worst Comment About Kenisha

ரவி மோகன் தனது சம்பளத்தில் இருந்து ஒரு பைசா கூட பெற்றோருக்கு செலவு செய்யவில்லை என்று கூறுகிறார். ஆனால் இதை அவரது அப்பா மோகன் சொன்னது கிடையாது. ஜெயம் ரவியை வைத்து கடைசி நான்கு படங்கள் எடுத்தவர் ஆர்த்தியின் அம்மா. இதில் மூன்று படங்கள் தோல்வி. ஒரு படம் மட்டும் ஜஸ்ட் பாஸ். இதனால் ஆர்த்தியின் அம்மாவுக்கு ரூபாய் 150 கோடிகள் நஷ்டம்.

ரவி மோகன் - ஆர்த்தி ரவி: கெனிஷா ரவி மோகனை வசிய மருந்து போட்டு மயக்கி வைத்துள்ளார். விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடக்கிறது. அந்த காலகட்டத்தில் ஆர்த்தியை அவர் எப்படி முன்னாள் மனைவி என்று கூற முடியும்? அதுவே தவறு. தமிழ் சினிமா ரசிகர்கள் விவாகரத்து பெற்ற தம்பதியர்களுக்கு ஆதரவு கொடுத்ததில்லை. குறிப்பாக பெண் ரசிகைகள் ஆதரவு கொடுத்ததில்லை. ராமராஜன், நளினியை விவாகரத்து செய்த பின்னர் தான் அவரது படங்கள் ஓடவில்லை. ஆனால் நளினி நடித்துக் கொண்டு உள்ளார்.

Bayilvan Ranganathan Talks Ravi Mohan Aarti Ravi Divorce Case issue Worst Comment About Kenisha

மோசமான கமெண்ட்: அதேபோல் பார்த்திபன் சீதாவை விவாகரத்து செய்த பின்னர் எத்தனையோ நல்ல படங்களை கொடுத்தார். ஆனால் பெண்கள் அவரது படங்களை பார்க்க வரமாட்டேன் என்கிறார்கள். கெனிஷா ஒரு வசியக்காரி. கெனிஷா தியானம் செய்பவர் என்று கூறுகிறார்கள். தியானம் செய்பவர் தெரசாவை போல் இருக்க வேண்டும். ஆனால், ( கெனிஷாவின் ஆடைகள் குறித்து மோசமாக விமர்சிக்கிறார்).

மயக்கி வைத்துள்ளார்: கெனிஷாவின் அழகை அவரது கணவர் ரசிக்க வேண்டும். ஆனால் அவர் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது மோசமாக ஆடைகள் அணிந்து வருகிறார். அதனால்தான் சொல்கிறேன், கெனிஷா, ரவி மோகனை மயக்கி வைத்துள்ளார். இருவரும் இணைந்து தியான மண்டபம் கட்டுவதாக சொல்கிறார்கள். அதற்கு யார் வருவார்கள். தனது மகன்களுக்கு விபத்து நடந்தது கூட தெரியவில்லை என்று கூறுவது ஒரு அப்பாவிற்காக அழகா?" என்று விமர்சித்துள்ளார். ஆர்த்தி ரவி மற்றும் ரவி மோகன் விவாகரத்து விவகாரம் தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்து பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மோசமான பேச்சு: மேலும் கெனிஷா குறித்து தனி மனித தாக்குதல் நடத்துவது போல பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக ஒருவரின் ஆடைகள் குறித்து அதாவது கெனிஷாவின் ஆடைகள் குறித்து மிகவும் மோசமாக பேசியுள்ளார். இதற்கு பலரும் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பயில்வான் ரங்கநாதன் இதற்கு முன்னரும் பலரை மோசமாக விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ரவி தனது அறிக்கையில் தனது மகன்களுக்கு விபத்து நடந்ததே தனக்குத் தெரியாது என்று கூறுகிறார். ஒரு அப்பாவாக இதைச் சொல்ல அவர் வெட்கப்பட வேண்டும். ஆர்த்தியும் அவரது குழந்தைகளும் சென்னையில்தான் உள்ளார்கள். அவர்கள் ஒன்றும் லண்டனில் இல்லை. தனது மகன்களை ரவி மோகன் பார்க்கச் செல்லலாமே. ஆனால் அவர் பார்க்கச் செல்லவில்லை. இவர் பார்க்கப் போனால், ஆர்த்தியும் அவரது அம்மாவும் என்ன பிடித்து வைத்துக் கொள்வார்களா? அல்லது அடித்து விடுவார்களா? இவர் போகவில்லை.

கையை அறுத்த ரவி மோகன்: ரவி மோகனை விட ஆர்த்தியின் அம்மா கோடீஸ்வரி. ஆர்த்தி லண்டனில் படித்தவர். இருவரும் ஒன்றாக படிக்கும் போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறுகிறது. ஆர்த்தியை திருமணம் செய்து கொள்ள ரவி முடிவு செய்கிறார். இது தொடர்பாக ஆர்த்தியின் தந்தையிடம் பேசுகிறார். ரவி மோகனின் தந்தை ஆர்த்தியின் அம்மாவிடம் பேசும் போது அவர் முடியாது என்று கூறுகிறார். இதனால் ஆர்த்தியின் மீது இருந்த காதலால், ரவி தனது கையை அறுத்துக் கொள்கிறார். ஆர்த்திக்காக கையை அறுத்துக் கொண்ட ரவி மோகனின் காதல் இன்று எங்கே போனது எனத் தெரியவில்லை.

வசியம்: எத்தனை பேருடன் வேண்டுமானாலும் ஒருவருக்கு காதல் வரலாம். ஆனால் வாழ்க்கை என்றைக்கும் மனைவியுடன் மட்டும் தான் என்பதை ரவி மோகன் எப்போது புரிந்து கொள்கிறாரோ அப்போது அவர் மனிதராக இருப்பார். கெனிஷா ரவி மோகனுக்கு வசியம் போட்டு வசியப்படுத்தி வைத்துள்ளார். ரவி கெனிஷாவின் வலையில் மாட்டிக் கொண்டார் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் அவர் தொடர்ந்து கெனிஷாவுடனே இருப்பார் என்றால் அவரது படங்கள் தோல்வியைச் சந்திக்கும்.

நல்ல அப்பா: ரவி மோகன் தனது குழந்தைகளுக்கு நல்ல அப்பாவாக இருக்க தவறிவிட்டார். அதேபோல் நல்ல கணவனாகவும் இருக்கத் தவறிவிட்டார். கெனிஷாவின் வசியத்தில் அவர் இருக்கிறார். மகன்கள் மகன்கள் என்று 5 பக்கத்திற்கு அறிக்கை விட்டுள்ள ரவி மோகன், தனது மகன்களுக்கு என்ன செய்தார்? அவரது மகன்களை பார்க்க விட மாட்டேன் என்கிறார்கள் என்பதே பொய். யார் அப்படி சொல்ல முடியும்? எங்காவது இது தொடர்பாக அடிதடி நடந்ததா? இவர் போய் அழைத்தால் மகன்கள் வரமாட்டார்களா? இனிமேல் யாராவது ஹீலர் என்று சொல்லிக் கொண்டு பெண்கள் வந்தால் அவர்களையும் மக்கள் கெனிஷா என்று தான் கூறுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ள கருத்துகள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X