Bayilvan Ranganathan - ஹீரோயின்களின் கிளாமரால்தான் தப்பிக்கிறாரா ரஜினி?.. பற்ற வைத்த பயில்வான்
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) ரஜினி படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் குறித்து பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் படத்திலும், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்திருக்கிறார். இவற்றில் லால் சலாமில் 50 நிமிடங்கள் மட்டும் வரும் கேமியோ ரோலில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருக்கிறார். இரண்டு படங்களின் மீதுமே எதிர்பார்ப்பு இருந்தாலும் ஹீரோவாக நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் மீதுதான் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

ஜெயிலர் ரிலீஸ்: ஜெயிலர் படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. அதற்காக மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலிருந்து ஸ்டார்களை ஜெயிலரில் களமிறக்கியிருக்கிறார் ரஜினிகாந்த். வரிசையாக இரண்டு படங்கள் தோல்வி அடைந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்ததால் ஜெயிலரில் பந்தயம் அடித்தே ஆக வேண்டும் என்று திட்டவட்டமாக இருக்கிறார் அவர்.
ட்ரெய்லர் எப்போது: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில் ரஜினியின் பேச்சு இன்றுவரை ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாக இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ஜெயிலர் ட்ரெய்லர் வருமா வராதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேசமயம் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் ட்ரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோர் செய்த தமன்னா: இதற்கிடையே ஜெயிலரிலிருந்து முதல் சிங்கிளான காவாலா வெளியானது. அதில் ரஜினியைவிட தமன்னாவின் ஆட்டம் ட்ரெண்டானது. இதனால் அந்தப் பாடலில் முழுக்க முழுக்க தமன்னாவே ஸ்கோர் செய்திருக்கிறார் என்ற கருத்து பலமாக முன்வைக்கப்படுகிறது. பாடல் போனால் என்ன ஒட்டுமொத்த படத்திலும் ரஜினி எப்படி ஸ்கோர் செய்வார் பாருங்கள் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு கூறிவருகின்றனர். அனைத்துக்கும் விடை பத்தாம் தேதி தெரிந்துவிடும்.
பயில்வான் ரங்கநாதன் பேச்சு: இந்நிலையில் எப்போதும் பரபரப்பை பற்ற வைக்கும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி பட ஹீரோயின்கள் குறித்து பேசியிருக்கிறார்ர். அதில் பேசிய அவர், "தமன்னாவின் பால் மேனி தூக்கலாக இருக்கும்போது ரஜினியை யார் பார்ப்பாங்க. உடல் அங்கங்களை காட்டுவதற்கு தமன்னா ஆர்வமாக இருக்கிறார். அதை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதனால்தான் படத்தின் வியாபாரமும் சூடுபிடிக்கிறது.
ரஜினியை எப்படி காட்டுவாங்க?: நிலைமை அப்படி இருக்கும்போது ரஜினியை எப்படி ஃபோகஸ் செய்து காட்டுவார்கள். ரஜினி நடித்த எல்லா படங்களையும் எடுத்துக்கொண்டீர்கள் என்றால் நயன் தாரா, ஸ்ரேயா என எல்லா நடிகைகளும் காட்ட வேண்டியதை காட்டிவிடுவார்கள். இவரோ சும்மா கையையும், காலையும் அசைத்து டான்ஸ் என்று சொல்லிவிட்டு நகர்ந்திடுவார்" என்றார்
இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் கதாநாயகிகளின் கிளாமரால் ரஜினி படம் தப்பிப்பதில்லை. அவருக்கென்று தனி வியாபாரம் இருக்கிறது. அனைத்தையும் தெரிந்தே பயில்வான் ரங்கநாதன் வேண்டுமென்று இப்படி பேசுகிறார் என பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











