எனக்கு பாடி டிமெண்ட் அதிகம்.. ரூமுக்கு வா காட்டுறேன்.. தொகுப்பாளினியை மோசமாக பேசிய பயில்வான்!

சென்னை: எனக்கு பாடி டிமெண்ட் அதிகம் தான் ரூமுக்கு வா காட்டுறேன் என்று தொகுப்பாளினியிடம் பயில்வான் ரங்கநாதன் படுமோசமாக பேசி உள்ளார்.

முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியராக அறிமுகமானவர் பயில்வான் ரங்கநாதன். நடிகராக மட்டுமல்லாமல், சினிமா பத்திரிக்கையாளராகவும் இருக்கிறார்.

bayilvan ranganathan vs youtube anchor interview clash

சொந்தமாக யூட்யூப் சேனல்களில் நடித்து வரும் இவர், நடிகர், நடிகையர் குறித்தும் அவர்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்தும் பேசி வருகிறார்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில்,யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பயில்வான் ரங்கநாதனிடம் பழைய நடிகர், நடிகையரின் அந்தரங்க விஷயங்களை தற்போது பேசுவது அவர்களது குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா? அவர்களின் வாழ்க்கை எப்படி போனா உங்களுக்கு என்ன,உங்களுக்கு காசு வந்தா போதுமா என்று கேள்வி கேட்டார் தொகுப்பாளினி.

சரியான சாக்கடை: இதற்கு பதில் அளித்த பயில்வான் ரங்கநாதன், என்னை பற்றி என் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும், நான் எதையும் ஆதாரம் இல்லாமல் சொல்ல மாட்டேன். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,பாக்யராஜ் போன்ற நல்ல மனிதர்கள் தான் என்னை சினிமாவில் வளர்த்துவிட்டார்கள். இதனால், சினிமாவில் உள்ள சாக்கடையை அகற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி பேசுகிறேன் என்றார்.

நொந்த பயில்வான்: இதைத்தொடர்ந்து தொகுப்பாளர் இந்த சாக்கடையில் தான் நீங்க வளர்ந்தீங்க என்பதை மறந்துவிடாதீர்கள் என்று பேச, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டென்ஷனான பயில்வான் என் வெயிட்டுக்கும், உடம்புக்கும் எட்டி மிதிச்சேன் சட்னி ஆய்டுவ என்று சொல்ல, தொகுப்பாளினி முன்புதான் நீங்க பயில்வான் இப்போது நீங்க நொந்த பயில்வான் என்றார்.

ரூமுக்கு வா காட்டுறேன்: இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பயில்வான் ரங்கநாதன், எனக்கு பாடி டிமெண்ட் அதிகம், ரூமுக்கு வா நான் பயில்வானா இல்லையா என்பதை காட்டுகிறேன் என்று படுமோசமாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பொதுவெளியில் ஒரு பெண்ணிடம் மோசமாக பேசிய பயில்வான் ரங்கநாதனை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X