நீங்கள் எல்லாம் அந்த சீனில் நடித்ததே இல்லையா?.. பயில்வானை பஞ்சராக்கிய ஷகீலா
சென்னை: பயில்வான் ரங்கநாதன் கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் இருந்துவருகிறார். அதுமட்டுமின்றி பத்திரிகையாளராகவும் இருக்கிறார். இப்போது யூட்யூப் சேனல்களில் பேட்டி கொடுத்துவரும் அவர் சினிமா பிரபலங்களின் அந்தரங்கம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தொடர்ந்து பேசிவருகிறார். அது பலரிடம் கடும் கண்டனத்தை சம்பாத்தித்திருக்கிறது. இந்தச் சூழலில் தனியார் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதனை வாயடைக்க வைத்தார் ஷகீலா
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
சண்டை செய்த ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் தான்தோன்றித்தனமாக பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரேகா நாயர். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ராதிகா குறித்து அவதூறாக பேசியதால் பயில்வானை ராதிகா செருப்பால் அடித்தார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது.
கே.ராஜனின் பதிலடி: வீடியோக்களில் மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சியிலும் சர்ச்சை கேள்விகளை கிளப்பும் பயில்வான் ஒருமுறை தயாரிப்பாளர் ராஜனிடம் வாயை கொடுத்தார். அதற்கு கே.ராஜன் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தார். ராஜன் அப்படி பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பயில்வான் போன்ற ஆட்களுக்கு ராஜன் வகையறாதான் சரியான ஆட்கள் என ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர். சமீபத்தில்கூட ரத்னம் பட ப்ரஸ் மீட்டில் விஷாலும் பயில்வானுக்கு சரியான பதிலடியை கொடுத்திருந்தார்.
ஷகீலா: இந்தச் சூழலில் தனியார் சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் ஷகீலாவும், பயில்வான் ரங்கநாதனும் கலந்துகொண்டார்கள். அப்போது பயில்வான் ரங்கநாதனிடம் ஷகீலா, “ஆடை என்பது ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரம். நீங்களும் காவல் துறை அதிகாரியாக இருந்தவர்தான். அதற்கு பிறகுதான் பத்திரிகையாளராக பயணித்தவர். பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கும் நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சிகளில் நடித்ததே இல்லையா என்று கேள்வி எழுப்பினார். இதனை எதிர்பார்க்காத பயில்வான் பதில் சொல்ல முடியாமல் திணறினார். ஷகீலா இந்த பேச்சை பார்த்த ரசிகர்கள், பயில்வான் ரங்கநாதனை பஞ்சராக்கிட்டாங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











