Big Boss 7 - அய்யய்யோ பிக்பாஸில் பயில்வான் ரங்கநாதனா?.. அந்த நடிகை வேற இருக்காங்களாம்?.. என்ன நடக்கப்போகுதோ?
சென்னை: Big Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் ஏழாவது சீசனில் பயில்வான் ரங்கநாதனும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. எந்த சீசனிலும் இல்லாத அளவு கடந்த சீசனில் சண்டை, சச்சரவுகளும்; எந்த சீசனுக்கும் இல்லாத பேச்சும் அந்த சீசனுக்கு எழுந்தது. அதற்கு காரணம் இதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள். குறிப்பாக, விக்ரமன், அசீம், ஷிவின்.

பிக்பாஸ் 6 சச்சரவுகள்: கடந்த சீசனில் ஜிபி முத்து, தனலட்சுமி, அசீம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட 20 பேர் கலந்துகொண்டனர். சீசன் ஆரம்பித்த சில வாரங்களிலேயே தனது மகனின் உடல்நிலையை காரணம் காட்டி ஜிபி முத்து தாமாகவே வெளியேற பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஜிபி முத்து பக்கா எண்டெர்டெயினர் அவர் வெளியேறிவிட்டால் சீசன் பிக்கப் ஆகுமா என்ற சந்தேகம் பார்வையாளர்களுக்கே இருந்தது. ஆனால் அவர் வெளியேறிய பிறகுதான் சீசன் களைகட்ட தொடங்கியது.
முற்றிப்போன சண்டை: எப்போதும் பிக்பாஸில் சச்சரவுகள் வருவது இயல்புதான். ஆனால் கடந்த சீசனில் அசீம், தனலட்சுமி, அமுதவாணன், ஜனனி, விக்ரமன், ஷிவின் என பலரது பேச்சும், செயல்பாடுகளும் பார்வையாளர்களிடையே பெரும் விவாதமாகவே மாறிப்போனது. தினமும் தகராறு என ரகளையாக நகர்ந்தது அந்த சீசன். இதனால் பலரும் விரும்பி பார்க்க தொடங்கினர். இறுதியி அசீம் டைட்டிலை தட்டி செல்ல விக்ரமன் இரண்டாவது இடத்தையும் ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பிக்பாஸ் : இந்தச் சூழலில் பிக்பாஸ் ஏழாவது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழ ஆரம்பித்திருந்தது. அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சமீபத்தில் அதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டது. அதில் கமல் ஹாசன் இடம்பெற்றிருந்தார். இதனையடுத்து இந்த சீசனில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.
இந்த சீசனில் யார் யார்?: இந்த சீசனில் பப்லு ப்ரித்விராஜ், ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இது குறித்து மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இதில் பயில்வான் ரங்கநாதன் கலந்துகொள்ளவிருக்கிறார் என கூறப்படுகிறது.
ரேகா Vs பயில்வான்: ஏற்கனவே ரேகா நாயருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. சூழல் இப்படி இருக்க பயில்வானையும் இதில் களமிறக்கினால் வீட்டில் கலவரம் உறுதிதான் என்கின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











