கௌசல்யா லைஃப்ல இவ்ளோ நடந்துடுச்சா? திருமணத்தில் விருப்பம் இல்ல.. ரகசியத்தை சொன்ன பயில்வான்!

சென்னை: அழகான க்யூட் நடிகையாக 90களில் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த கௌசல்யா, காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் வெற்றியால் கோலிவுட்டில் மிகவும் பிரபலமானார். இதையடுத்து விஜய், சூர்யா, பிரபுதேவா, கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், குறித்து பயில்வான் ரங்கநாதன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை கௌசல்யா என்றதும் நினைவிற்கு வருவது சூப்பர் ஹிட் பாடல்கள் தான். அவரின் முதல் படமான காலமெல்லாம் காதல் வாழ்க படத்தில் வரும் ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் பாடலை இன்றைய இளசுகளும் ப்ளே லிஸ்டில் வைத்துள்ளனர். பல வெற்றிப்படங்களை கொடுத்த கௌசல்யாவை சந்தோஷ் சுப்பிரமணியன் படத்திற்கு பிறகு சினிமாவில் பார்க்கவே முடியவில்லை.

Bayilvan Ranganathans Breaking Secrets about actress Kausalya

அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த கௌசல்யாவிற்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அதற்காக நிறைய மாத்திரைகளை சாப்பிட்டதால், திடீரென உடல் எடை கன்னாபின்னா என்று ஏறிவிட்டது. இந்த காரணத்தால் தான் நான் சினிமாவை விட்டு விலகினேன். இப்போது அந்த பிரச்சனை சரியாகி மீண்டும் பழைய கௌசல்யாவாக வந்து இருக்கிறேன் என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

Bayilvan Ranganathans Breaking Secrets about actress Kausalya

விஜய் தான் க்ரஷ்: மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும், இதற்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அது சீரியலாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரம் என்றால் நடிப்பேன். ஆனால், சீரியலை விட வெப் தொடரில் நடிக்க விருப்பம் இருக்கிறது என்றார். மேலும், நடிகர் விஜய் தான் என்னுடைய க்ரஷ், அவருடன் சேர்ந்து நடித்த பிரியமுடன் திரைப்படத்தை என்னைக்குமே மறக்க மாட்டேன். அந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றார்.

Bayilvan Ranganathans Breaking Secrets about actress Kausalya

படவாய்பு இல்லை: இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன், நடிகை கௌசல்யா குறித்து, பல விஷயத்தை பேசி உள்ளார். அதில், 90காலகட்டத்தில் மிகவும் ஒல்லியான ஒரு நடிகை, சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே சதைப்பிடிப்பு இல்லாமல் அப்படித்தான் இருந்தார். சில வெற்றிப் படங்களில் நடித்து வந்த கௌசல்யாவிற்கு ஒரு கட்டத்திற்கு மேல் படவாய்ப்பு இல்லை. மேலும், திடீரென அவர் குண்டாகி ஆளே அடையாளம் தெரியாதது போல மாறிவிட்டார். தற்போது, அதற்கான சிகிச்சை எடுத்து மீண்டும் பழைய நிலைக்கு மாறி உள்ளார்.

திருமணத்தில் விருப்பம் இல்லை: 45 வயசாகும் கெளசல்யா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் குறித்து எப்போது கேள்வி கேட்டாலும், இல்லற வாழ்க்கையில் விருப்பம் இல்லை, இப்படியே இருக்க விரும்புகிறேன். எனக்கு பாதுகாப்பு வேண்டும், எனக்கு தோன்றுகிற நேரத்தில் நான் திருமணம் செய்துக் கொள்கிறேன். இப்போதைக்கு திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறேன் என்று கூறியதாக, பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X