பயில்வான் ரங்கநாதன் மகளுக்கு நிச்சயதார்த்தம்.. இணையத்தில் வெளியான போட்டோ!
சென்னை: பயில்வான் ரங்கநாதனின் இளைய மகளுக்கு இன்று வீட்டில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த போட்டோவை பயில்வான் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்த பயில்வான் ரங்கநாதன், பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானைமுடிச்சு படத்தில் வைத்தியராக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா பத்திரிக்கையாளரான இவர் தற்போது பத்திரிகைகளில் நடிகர் நடிகைகள் குறித்தும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பேசி பலரின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார்.

விளாசிய சுசித்ரா: அண்மையில் பயில்வான் ரங்கநாதனை பாடகி சுசித்ரா பிட்டு படத்திற்கு நடிகைகளை சப்ளை செய்தவர் என்றும். அவர் பத்திரிக்கை ஆளே இல்லை என்றும், பலரிடம் காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார் என்றும் கடுமையான வார்த்தையால் திட்டி தீர்த்து இருந்தார். இதற்கு பயில்வானும் சளைக்காமல் பதில் அளித்து இருந்தார். கடந்த சில வாரமாக இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பேசுபொருளாக இருந்தது.
ஷகிலா பயில்வான் சண்டை: இந்த பிரச்சனை மட்டுமில்லாமல், நடிகை ஷகிலாவிடம் சிக்கினார் பயில்வான், அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பேசும் நீங்கள் உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியுமா என்று கேட்டு, உங்க பொண்ணு இன்னொரு பொண்ணை காதலிக்கிறாங்க அது தெரியுமா என்று சொன்னதும், மிரண்டு போன பயில்வான் ரங்கநாதன் அதற்கு உங்க நாக்கு அழுகிடும் என்று சொல்லி இருந்தார். இதனால் இருவருக்கும் பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த பயில்வான் அந்த டிவி பலவற்றை எடிட் செய்து போட்டுவிட்டதாக கூறி இருந்தார்.
மகளுக்கு நிச்சயதார்த்தம்: இப்படி ஒரு பக்கம் மகள் குறித்து பிரச்சனை நடந்து கொண்டு இருக்க தனது இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்றும், நிச்சயதார்த்தம் ஆன போட்டோவை பயில்வான் ரங்கநாதன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை ஷகிலா, பயில்வானின் மகள் பெண்ணை காதலிப்பதாக கூறிய நிலையில், தற்போது நிச்சயம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











