சத்தமே இல்லாமல் நடந்த பயில்வான் ரங்கநாதன் மகள் திருமணம்.. பங்கேற்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
சென்னை: நடிகராகவும், பத்திரிகையாளராகவும் விளங்குபவர் பயில்வான் ரங்கநாதன். நடிகர்கள், நடிகைகள் குறித்து அந்தரங்கமான விஷயங்களை பேசி; அதனால் சர்ச்சைகளை உருவாக்கி அதனை வைத்து யூட்யூபில் பிரபலமாக இருப்பவர் அவர். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சூழல் இப்படி இருக்க அவரது மகளின் திருமணம் சத்தமே இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்திருக்கிறது.
பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்திவருபவர். சினிமாவில் நடித்து, பத்திரிகையாளராக இருந்துவருபவர் இப்போது யூட்யூப் தளத்தில் இயங்கிவருகிறார். தான் பேசும் சேனல்கள் அதிக வியூஸ்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை தொடர்ந்து பேசிவருகிறார். அவர் பேசுவது எல்லாம் பச்சை பொய் என்று ஒருதரப்பினர் கூறினாலும்; கடந்த பல வருடங்களாகவே சினிமாவுடன் தொடர்பில் இருப்பதால் தான் பேசுவது உண்மை என்று பயில்வான் சொல்வது வழக்கம்.

பதிலடி: ஆரம்பத்தில் அவரது பேச்சு செலிபிரிட்டிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல அவரது பேச்சில் அநாகரீகம் ஒட்டிக்கொள்ள ஆரம்பித்தது. நிலைமை இப்படி இருக்க நடிகை ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்ததை வைத்து பயில்வான் தாறுமாறாக பேச; ரேகாவோ நேரடியாக பயில்வானிடம் மல்லுக்கு போய்விட்டார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி; ரேகா நாயருக்கு பலரும் தங்களது பாராட்டை கொடுத்தனர். அதேபோல் ராஜன், விஷால், பாலா உள்ளிட்டோரும் தங்களது தரமான பதிலடியை கொடுத்திருக்கின்றனர்.
வழக்கு போடுங்கள்: தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம், நடிகை அஞ்சலி தொடர்பான விவகாரம், இயக்குநர் பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த விவாகரத்து என பயில்வான் ரங்கநாதன் பேசாத விஷயங்களே இல்லை. ஆனால் அத்தனையையும் இவர் அருகில் இருந்து பார்த்தபடியே பேசுவார். இதனால் பல பத்திரிகையாளர் சந்திப்புகளில் சலசலப்பும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷகீலா பேச்சு: இதற்கிடையே தனியார் சேனல் ஒன்றின் நிகழ்ச்சியில் ஷகீலாவும் பயில்வான் ரங்கநாதனும் கலந்துகொண்டார்கள். அப்போது பயில்வான் ரங்கநாதன் மகள் குறித்து பேசிய ஷகீலா, 'உங்களது மகள் இன்னொரு பெண்ணை காதலிக்கிறார் தெரியுமா?' என்று அவரிடமே கூறினார். அதற்கு உடனே பயில்வானோ நாக்கு அழுகிவிடும் என்று பேசினார். அந்த விவகாரம் முடிந்த சில நாட்களுக்குள்ளேயே தனது மகளுக்கும், தனது உறவுக்கார பையனுக்கும் நிச்சயதார்த்தத்தை முடித்து வைத்தார். அவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்துவந்ததாக கூறப்படுகிறது.
சத்தமே இல்லாமல் நடந்த திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்தாலும் எப்போது திருமணம் என்பது குறித்து எதுவுமே வாய் திறக்காமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க கடந்த 14ஆம் தேதி சென்னையில் பயில்வானின் மகள் திருஜ்மணம் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சீரியல் நடிகர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.
இதனைப் பார்த்த ரசிகர்களோ சினிமாவில் பல வருடங்களாக இருப்பதாக கூறும் பயில்வான் ஏன் தனது மகள் திருமணத்துக்கு பல பிரபலங்களை அழைத்துவரவில்லை. ஒருவேளை அவர்கள் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசிவருவதால் அவர்களை சந்தித்து பத்திரிகை வைக்க கூச்சப்பட்டிருப்பாரோ என்று பலவாறு கேள்விகளை முன்வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











