Bayilvan Ranganathan Review: கவுண்டமணிக்கு எதுக்கு ஃபைட்.. ஒத்த ஓட்டு முத்தையா பயில்வான் விமர்சனம்!
சென்னை: மறைந்த நடிகர் 'சோ' போல அரசியல் நய்யாண்டி செய்து அசத்தியுள்ள கவுண்டமணிக்கு எதுக்கு தேவையில்லாமல் சண்டைக் காட்சிகளை இயக்குநர் வைத்தார் என்று தான் தெரியவில்லை என பயில்வான் ரங்கநாதன் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்துக்கு விமர்சனம் கொடுத்துள்ளார்.
சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ஹிமா பிந்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது. குறைவான திரையரங்கில் மட்டுமே வெளியாகி இருக்கும் இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் படத்தில் உள்ள பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களை புட்டு புட்டு வைத்துள்ள விமர்சனம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
பாவமா இருக்காரு கவுண்டமணி: 85 வயதில் தள்ளாடி தள்ளாடி நடந்து வரும் கவுண்டமணியை வைத்து படமெடுத்திருப்பதே பெரிய விஷயம் தான். ஆள் தான் பார்க்க பாவமா இருக்கார். ஆனால், அவரது குரல் இன்னமும் 16 வயதினிலே படத்தில் கேட்ட அதே குரல் தான் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மறைந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் 'சோ' போல நய்யாண்டி ஜோக்குகளை கவுண்டமணி அடிப்பது எல்லாம் தியேட்டரில் சிரிக்க வைக்கிறது.
டிவி சீரியல் போல இருக்கு: அரசியல் நய்யாண்டி கருத்துக்களை எல்லாம் சொன்ன விதத்தில் இயக்குநர் பாராட்டுக்களை பெற்றாலும் அதை படமாக எடுத்த விதத்தில் மொத்தமாக சொதப்பி விட்டார். டிவி சீரியல் போல படத்தின் மேக்கிங் உள்ளது. நாடகம் போல காட்சிகளும் நடிகர்களின் நடிப்பும் உள்ளன. ஒளிப்பதிவாளர், எடிட்டர் என ஒருவரும் சரியாக வேலையே செய்யவில்லை. முன்னணி நடிகர்கள் மட்டும் தான் வாங்கிய காசுக்கு ஏதோ நடிக்க வேண்டுமே என நடித்தது போல உள்ளது. அதையெல்லாம் இயக்குநர் சரி செய்திருந்தால் இந்த ஒத்த ஓட்டு முத்தையா ஜொலித்திருப்பான். என்னுடைய விமர்சனம் இந்த படத்துக்கு 100க்கு 40 மதிப்பெண்கள் மட்டுமே என பாஸ் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். கவுண்டமணியின் பல காமெடி காட்சிகளில் பயில்வான் ரங்கநாதன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











