நிச்சயத்தோடு நின்று போன திருமணம்.. சினேகா குறித்த ரகசியத்தை உடைத்த பயில்வான்!

சென்னை: நடிகை சினேகா, பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இந்த தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக இணையத்தில் வதந்தி பரவிய நிலையில், பயில்வான் ரங்கநாதன், சினேகா குறித்து பல ரகசியத்தை புட்டு புட்டு வைத்துள்ளார்.

நடிகை சினேகா விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகினார். ஆனால், அந்த படம் வெளியாவதில் தாமதமானதால், மாதவனுடன் என்னவளே திரைப்படத்தில் நடித்தார், அதுவே அவரது முதல் படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, உன்னை நினைத்து, ஜனா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் என அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

Bayilvan Ranganathans speech about the Snehas first engagement

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர், அச்சம் உண்டு அச்சம் உண்டு படத்தில் பிரசன்னாவுடன் நடித்த போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அடுத்து, இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும், நடிப்பு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி, விளம்பரங்கள் என பலவற்றில் நடித்து வருகிறார்.

நிச்சயத்தோடு நின்று போன திருமணம்: இந்நிலையில் நடிகைகள் குறித்து எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து வரும் பயில்வான் ரங்கநாதன், சினேகா குறித்து பலருக்கும் தெரியாத ரகசியத்தை உடைத்துள்ளார். அதில், நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே வேறொருவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்று கூறியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர் நாக் ரவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, அனைவர் முன்பும் மோதிரம் மாற்றப்பட்டது.

காரணம் தெரியவில்லை: ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்களில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். நாக் ரவி திருமணம் செய்யவில்லை என்றும் நிச்சயத்தோடு திருமணம் நின்றுவிட்டதாகவும் சினேகா அப்போது அறிவித்து இருந்தார். இதையடுத்துத்தான், நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. பொதுவாக நம் தமிழர்களின் கலாச்சாரம் மோதிரம் மாற்றிக் கொண்டாலே பாதி திருமணம் முடிந்துவிட்டது என்று சொல்வார்கள். இருவரும் புருஷன், பொண்டாட்டி என்று தான் சொல்வார்கள். அதற்கான அர்த்தமும் அது தான். ஆனால், எந்த காரணத்திற்காக நாக் ரவியை சினேகா வேண்டாம் என்று சொன்னார் என்று தெரியவில்லை என அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X