அப்பாவையும், மகளையும் அடுத்தடுத்து இழந்த விஜய் ஆண்டனி.. பயில்வான் சொன்ன காரணத்தால் கொதித்த ரசிகர்கள்

சென்னை: இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வாழ்க்கையில் தொடர்ந்து பெரும் இழப்புகள் ஏற்பட காரணமே அவரது இந்த செயல் தான் என பயில்வான் ரங்கநாதன் இந்த நேரத்திலும் வெறும் வியூஸுக்காக வாய்க்கு வந்ததை பேசிய நிலையில், ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை பந்தாடி வருகின்றனர்.

நடிகைகள் பற்றியும் சினிமா பிரபலங்களின் அந்தரங்கங்கள் பற்றியும் பேசி பகீரை கிளப்பி வந்த பயில்வான் ரங்கநாதன் சமீப காலமாக விமர்சனங்களையும் நடிகர்கள் பற்றிய விஷயங்களையும் பேசி பரபரப்பை கிளப்பி வருகிறார்.

Bayilvan Ranganthan talks Why bad things happened to Vijay Antony slammed by fans

இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது மகளை இழந்துள்ள நிலையில், இந்த நேரத்திலும் அந்த விஷயம் குறித்து மோசமான தனது கருத்துக்களை பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது பலரையும் கடுப்பாக்கி உள்ளது.

வேதனையில் விஜய் ஆண்டனி: செல்லமாக 16 ஆண்டுகள் வளர்த்து வந்த தனது மகள் மீரா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கு என்ன காரணம் என்றே புரியாமல் மன வேதனையில் ஆழ்ந்துள்ளார் விஜய் ஆண்டனி.

இசையமைப்பாளராக பல முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து வந்த விஜய் ஆண்டனி ஹீரோவாகவும் சிறந்த படங்களை கொடுத்து வருகிறார். அதன் காரணமாக விஜய் ஆண்டனி வீட்டில் ஒரு சோகம் என்பதை அறிந்ததும் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பதறிப் போய் அந்த பிஞ்சுக்கு கடைசி அஞ்சலியை செலுத்த பாரதிராஜா முதல் சிம்பு வரை பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

பயில்வான் சொன்ன காரணம்: விஜய் ஆண்டனி தனது 7 வயதிலேயே அப்பாவை இழந்த நிலையில், அவர் கொஞ்சமும் திருந்தவே இல்லை. தொடர்ந்து தனது படங்களின் தலைப்புகளை எமன், சைத்தான், கொலை, ரத்தம் என அபசகுணமாகவே வைத்து வருகிறார்.

நெகட்டிவிட்டி அதிகம் இருந்தால், வாழ்க்கையிலும் அது அதிகளவில் பாதிக்கும். அதன் காரணமாகத்தான் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார் என்றும் தற்போது தனது மகளையும் இழந்து விட்டார் என்பது போல பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேசியது ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

திட்டும் ரசிகர்கள்: பயில்வான் ரங்கநாதனுக்கு மூளையே கிடையாது. எந்த விஷயத்தில் எப்படி பேசுவது என்றே தெரியவில்லை. அங்கே ஒருத்தர் தனது மகளை பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், சினிமா படங்களின் தலைப்புகளால் தான் விஜய் ஆண்டனி வாழ்க்கையில் சோகம் தொடர்கிறது என பேசலாமா? கொஞ்சமாவது சென்ஸ் வேண்டாம் என விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X