மண வாழ்க்கை சரியில்லை.. பவதாரிணியை காப்பாற்ற இளையராஜா அவ்வளவு செய்தார்.. பயில்வான் ரங்கநாதன் பேச்சு
சென்னை: பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி கடந்த வியாழக்கிழமை பித்தப்பை புற்றுநோய் காரணமாக இலங்கையில் உயிரிழந்தார். அங்கிருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு சொந்த ஊரான பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சூழலில் பவதாரிணி குறித்து பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
இளையராஜாவின் மகளான பவதாரிணி 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். மேலும் 10 படங்களுக்கு இசையும் அமைத்திருக்கிறார். தனித்துவமான குரல் வளம் கொண்ட அவர் கடைசியாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆத்தாடி ஆத்தாடி பாடலை பாடினார். இந்த சூழலில் அவருக்கு பித்தப்பையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஆயுர்வேதா சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக இலங்கை சென்ற அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார்.

நல்லடக்கம்: அதனைத் தொடர்ந்து அவரது உடல் இந்தியா கொண்டு வரப்பட்டது. முதலில் சென்னையில் இருக்கும் இளையராஜாவின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட பவதாரிணியின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது அஞ்சலியை நேரில் வந்து செலுத்தினர். பிறகு அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்தனர். பிறகு அவருக்கு பிடித்த பச்சை நிற புடவையை அணிவித்து இளையராஜாவின் தாய் மற்றும் மனைவி ஆகியோரின் சமாதிக்கு அருகே பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பவதாரிணிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் முன்னதாகவே காதலில் விழுந்துவிட்டார். அவர் சினிமாலயா பத்திரிகை அதிபர் எஸ்.என்.ராமச்சந்திரனை காதலித்தார். அந்தக் காதல் அவர்கள் நினைத்தபடியே கைகூடியது. இரண்டு பேருமே திருமணம் செய்துகொண்டார். இருந்தாலும் அவர்களின் இல்லற வாழ்க்கை அவர்கள் நினைத்தது போல் அமையவில்லை.
கருத்து வேறுபாடு: அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டு பேரும் பிரிந்து தத்தமது வழிகளில் சென்றுவிட்டனர். பவதாரிணி அப்பாவுடன் வந்துவிட்டார். அந்த சமயத்தில்தான் பவதாரிணிக்கு பித்தப்பையில் கல் இருப்பது தெரியவந்தது. உடனே அதனை கரைத்துவிடலாம் என்று முயற்சி செய்து மருத்துவமனைக்கு சென்றார்கள். ஆனால் அதற்குள் அது புற்றுநோயாக மாறிவிட்டது. காலப்போக்கில் அந்த புற்றுநோய் சிறுநீரகத்திலும் பரவிவிட்டது.
ஏகப்பட்ட முயற்சிகள்: அந்தப் புற்றுநோயை குணப்படுத்துவதற்கு ஏராளமான மருத்துவ சிகிச்சைகளை பவதாரிணி மேற்கொண்டுதான் வந்தார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. இளையராஜாவும் பவதாரிணியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என பல வெளிநாடுகளில் பல சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்தார்தான்.
வேலைக்கு ஆகவில்லை: கடைசியில் அவை எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. அதனை உணர்ந்த பிறகுதான் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறினார்கள். பவதாரிணிக்கு தன்னுடைய மரண நாள் எது என்பது முன்னரே தெரிந்துவிட்டது. ஆம், கடந்த வருடம் ஜூலை மாதம் அவருக்கு பிறந்தநாள். அந்த நாளில் அவரது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து தனக்கு புற்றுநோய் இருப்பதை மிகவும் இயல்பாக சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











