எத்தனை கணவர்கள்.. பளிச்சென்று பதில் சொன்ன அம்பிகா.. பயில்வான் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: 80களில் கொடி கட்டப்பறந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா. பல முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்த அம்பிகாவின் திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி சரியாக அமையாமல் போனது. அம்பிகாவின் திருமண வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பல விஷயத்தை கூறியுள்ளார்.
1976ம் ஆண்டு சோட்டாணிக்கரை அம்மா என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அம்பிகா. அந்த படத்தை தொடர்ந்து பல திரைபடங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதையடுத்து, 1978ம் ஆண்டு மயமில்லை போலும் மலையாளப்படத்தில், என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தில் இவரின் நடிப்பு ஓரளவிற்கு பேசப்பட்டது.

நடிகை அம்பிகா: இதைத் தொடர்ந்து, 1981ஆம் ஆண்டு தமிழில் வெளியான அந்த ஏழு நாட்கள் படத்தில் பாவாடை தாவணியில் வந்து நிறைவான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்தில், அம்பிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இந்த படத்தைத் தொடர்ந்து கமல், ரஜினி,விஜயகாந்த், சத்யராஜ், சிவாஜி கணேஷன் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியான நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் பலத் திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தன.
லிவிங் டுகெதர் வாழ்க்கை: படங்களில் படு பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அம்பிகா,1988 ஆம் ஆண்டு பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண் அமெரிக்காவில் செட்டில் ஆனார். பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். இதையடுத்து, மீண்டும் 2000 ஆம் ஆண்டு ரவிகாந்த் என்பவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்திய அம்பிகா, பிறகு அவருடனும் சண்டை காரணமாக அவரை விட்டு பிரித்து தற்போது மகன்களுடன் வசித்து வருகிறார்.
வடிவேலுவுடன் கிசுகிசு: விவாகரத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த அம்பிகா தொடர்ந்து அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது சீரியல்களில் ஆக்டிவாக இருக்கிறார். நடிகை அம்பிகா மற்றும் நடிகர் வடிவேலு பற்றிய கிசுகிசுக்கப்பட்டார். அம்பிகாவைப் போலவே அவரது தங்கை ராதாவைப் பற்றியும் தமிழ் ஊடகங்களில் கிசுகிசுக்கள் அதிகம் பரவியது. அக்கா தங்கை இருவரும் சேர்ந்து 80,90ஸ் காலகட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள்.
பயில்வான் ரங்கநாதன்: நடிகை மற்றும் நடிகர்களின் அந்தரங்க விஷயத்தை அலசி ஆராய்ச்சி செய்யும் பயில்வான் ரங்கநாதன், நடிகை அம்பிகா குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகை அம்பிகாவிடம் உங்களுக்கு எத்தனை கணவர்கள் என்று ஒரு செய்தியாளர் கேள்வியை கேட்க, அதற்கு அம்பிகா நீங்களே எவ்வளவு கணவர்கள் என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். ஆனால், எனக்கு 2 மகன்கள் தான் இருக்கிறார்கள் சிரித்துக்கொண்டே பதில் சொன்னாராம். இதை சுட்டிக்காட்டிய பயில்வான் உட்காந்து கணக்குப் போடும் அளவிற்கு பல நடிகை அம்பிகாவிற்கு பல கணவர்களா என்று தனது பாணியில் பயில்வான் ரங்கநாதன் லக்கலாக இந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











