BB 8: வர்ஷினியிடம் உருகும் அருண்.. ரொம்ப கொடுத்து வைத்தவர் என ரசிகை கமெண்ட் .. அர்ச்சனா ரியாக்ஷன்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த அக்டோபர் 3ஆம் தேதியில் இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இம்முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். இதற்கு முன்னர் ஒளிபரப்பான 7 சீசன்களை விடவும் இந்த சீசன் மிகவும் போராக இருப்பதாக ரசிகர்களும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதியும் தொடர்ந்து கூறிக்கொண்டே வருகின்றனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே, இந்தவாரம் ஒரு கண்டெண்ட் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இந்நிலையில், ரசிகர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவுக்கு சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் ரியாக்ஷன் பலரையும் கவர்ந்துள்ளது.
சீசன் 8ஐப் பொறுத்தவரையில், போட்டியாளர்களால் மிகவும் சுவாரஸ்யமான கண்டெண்ட்டை கொடுக்க முடியவில்லை. போட்டியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் எதுவும் எடுபடாததால், ஒவ்வொரு முறையும் பிக்பாஸே சுவாரஸ்யம் என்ற வார்த்தையை அடிக்கடி போட்டியாளர்களுக்கு நினைவு படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் தரப்பில் இருந்து போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் சிலர் மாணவர்களாகவும் சிலர் பள்ளி ஆசிரியர்களாகவும் உள்ளனர். இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசய கதாபாத்திரம் பிக் பாஸ் தரப்பில் இருந்து டிக்டேக் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த வார கேப்டன் அருணுக்கு விவாகரத்து கோரியுள்ள மனைவியை மீண்டும் சமாதானப்படுத்தும் துணைத் தலைமையாசிரியர் கதாபாத்திரம்.
அருண்: இதனால் தனது கதாபாத்திரத்தில் அருண் சிறப்பாக நடித்து வருகின்றார் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டுகின்றனர். குறிப்பாக விவாகரத்து கோரியுள்ள மனைவி கதாபாத்திரத்தில் இருக்கும் வர்ஷினி கோபமாக என்ன பேசினாலும், அதனை மிகவும் மென்மையாக கையாண்டு, அட்டகாசமான மற்றும் அன்பான பதில்களால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

அர்ச்சனா: இந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், " அருண் எவ்வளவு இனிமையானவராக உள்ளார். உண்மையாலுமே அர்ச்சனா கொடுத்து வைத்தவர்தான்" எனப் பதிவிட்டு, அர்ச்சனாவை டேக் செய்துள்ளார். இந்தப் பதிவுக்கு அர்ச்சனா, " ❤️😌💕கேப்டன் 👑" என பதிவிட்டுள்ளார். அருண் மற்றும் அர்ச்சனா காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் இருந்தது.
காதல்: இந்த வாரம் அருண் கேப்டன் ஆன பின்னர் அர்ச்சனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். ஆனால் அர்ச்சனாவின் செல்லப் பெயரைக் குறிப்பிட்டு வாழ்த்து சொன்னார். இந்த வீடியோவைப் பகிர்ந்த அர்ச்சனா தனது பிறந்த நாள் இப்போதுதான் பூர்த்தி அடைந்திருப்பதாகவும், இதற்காக இரவு 1 மணி வரை காத்திருந்ததாகவும் பதிவிட்டிருந்தார். இவரது இந்தப் பதிவு இருவரும் காதலிப்பதை உறுதி செய்வதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











