வடிவேலுவை சந்தித்த இரண்டு அழகான பெண்கள்... என்ன காரணம்?
சென்னை : நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சூட்டிங் துவங்கியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து வருகிறார்.
இந்நிலையில் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ மற்றும் பிக்பாஸ் பிரபலம் மதுமிதா இருவரும் வடிவேலுவை சந்தித்துள்ளனர்.

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். அவர் அவரின் காமெடி கலாட்டாக்கள் மிகவும் பிரபலம். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான காமெடி கலாட்டாக்களுடன் ரசிகர்களை அவர் சந்தித்து விடுவார். பெரும்பாலும் நாயகர்களுக்கு சவால்விடும் வகையில் அவரது காமெடி கலாட்டாக்கள் அமைந்துவிடும்.

காமெடி ஹீரோ
காமெடி ஹீரோவாகவும் வடிவேலு நடித்து வெளிவந்த படங்கள் மிகவும் சிறப்பான வெற்றி படங்களாக அமைந்தன.
தொடர்ந்து பிசியாக நடித்து வந்த வடிவேலு சில காலங்கள் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

வடிவேலு ரீ-என்ட்ரி
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் அவர் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சந்தோஷ் நாராயணன் இசை
இந்தப் படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் மூலம் மீண்டும் பழைய வடிவேலுவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

காமெடி நாயகன்
இந்த படத்தில் காமெடி நாயகனாக நடித்து வரும் வடிவேலு மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கவும் கதைகள் கேட்டு வருகிறார். விரைவில் வடிவேலுவை பழைய வடிவேலுவாக பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மதுமிதா - தீ சந்திப்பு
இந்நிலையில் பிக்பாஸ் பிரபலம் மதுமிதா மற்றும் பாடகி தீ இருவரும் வடிவேலுவை நேரில் சந்தித்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த பேஷன் டிசைனர் மற்றும் மாடலான மதுமிதா பிக்பாஸில் தன்னுடைய கொஞ்சும் தமிழால் மக்களை கவர்ந்தவர்.

பிக்பாஸ் பிரபலம்
விரைவில் தமிழ் கற்றுக் கொண்டதற்காக கமல்ஹாசனின் பாராட்டுகளைப் பெற்றவர். கடந்த மாதத்தில் பிக்பாஸில் இருந்து எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட்டார்.

வடிவேல் உடன் சந்திப்பு
இந்நிலையில் அவர் தனது தோழி பாடகி தீயுடன் இணைந்து வடிவேலுவை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











