கங்குலியின் பயோபிக்.. பார்முக்கு வந்து ஐஸ்வர்யா... இனி கிழி கிழி தான்!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவ்ரவ் கங்குலியின் பயோபிக்கை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, ஐஸ்வர்யா பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை சந்தித்து படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா, தனது கணவர் தனுசை வைத்து '3' திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கி இருந்தார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர். இருவரின் பிரிவு அறிவிப்பு ரசிகர்களை மட்டுமின்றி திரைப்பிரபலங்களையும் கவலையில் ஆழ்த்தியது. இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகள் நடந்தும் அது பயன் அளிக்கவில்லை.

செம பிஸி

செம பிஸி

மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ஐஸ்வர்யா தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். தொடர்ந்து சைக்கிளிங், ஒர்க் அவுட் என செம பிஸியாகவே இருக்கிறார். சமீபத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வெளியிட்டு இருந்தார். அந்த ஆல்பம் பெரும் வரவேற்பை பெற்றது.

கங்குலி பயோபிக்

கங்குலி பயோபிக்

தற்போது ஐஸ்வர்யா, கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்த சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை இயக்குவதில் ஐஸ்வர்யா ஆர்வம் காட்டுவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கிரிக்கெட் வீரரான தோனி, கபில் தேவ் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு விட்டது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்த வகையில் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது, ஐஸ்வர்யா தனது இரு மகன்களுடன் கொல்கத்தாவில் ஐபிஎல் ப்ளேஆஃப் மற்றும் எலிமினேட்டர் போட்டி பார்த்து வருகிறார்.மேலும்,ஐஸ்வர்யா கங்குலியை சந்தித்து பயோபிக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X