twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவங்க மேல சந்தேகமே வரலை..திருமணம் செய்வதாகப் பழகி மிரட்டிய கும்பல்..நடந்தது என்ன? பூர்ணா விளக்கம்!

    By
    |

    கொச்சி: திருமணம் செய்துகொள்வதாக பழகி மோசடியில் ஈடுபட்ட கும்பல், என்ன செய்தார்கள் என்பது பற்றி நடிகை பூர்ணா விளக்கம் அளித்துள்ளார்.

    Recommended Video

    திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய நடிகை பூர்ணா

    நடிகை பூர்ணாவின் அம்மா ரவ்லா, கேரளா மாநிலம் மராடு போலீஸ் நிலையத்தில் கடந்த
    புதன்கிழமை ஒரு புகாரை அளித்தார். அதில், சிலர் தங்களிடம் பணம் கேட்பதாகவும் கொடுக்கவில்லை என்றால் அழித்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

    நடிகை வனிதா மூன்றாவது திருமணம்.. மகளே மணப்பெண் தோழியானார்.. தீயாய் பரவும் வீடியோ!

    நெருக்கத்தை உருவாக்கினர்

    நெருக்கத்தை உருவாக்கினர்

    இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பூர்ணாவை மிரட்டியவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பூர்ணா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: எங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் அவர்கள் போனில் அறிமுகமானார்கள். நாங்கள் ஒரு வாரத்துக்கு மேலாக போனில் பேசிக்கொண்டிருந்தோம். அவர் தன்னை அன்வர் என்று அறிமுகப்படுத்தினார். என் பெற்றோரிடமும் சகோதரரிடமும் பேசிக்கொண்டிருந்தார்கள். போனில் பேசியே எங்கள் குடும்பத்தினருடன் நெருக்கத்தை உருவாக்கினர்.

    சம்மதிக்கவில்லை

    சம்மதிக்கவில்லை

    அன்வரின் பெற்றோர், சகோதரர், சகோதரி, சகோதரி மகள் என்று சொல்லப்பட்டவர்களுடன் பேசினோம். ஆனால், அவர்கள் வீடியோ அழைப்புக்கு சம்மதிக்கவில்லை. அதன் மூலம் தங்கள் முகங்களை காட்டத் தயாராக இல்லை. மிகவும் மெச்சூரிட்டியாகவும் கண்ணியமாகவும் பேசினார்கள். அதெல்லாம் பொய் என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் பணம் கேட்டபிறகுதான் எங்களுக்கு சந்தேகம் வந்தது.

    வெளியேறுவதில்

    வெளியேறுவதில்

    அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்றார்கள். அவர்களை சந்தித்த பிறகு அடுத்தக்கட்ட விஷயத்தை பேசலாம் என நினைத்தோம். வந்தார்கள். அவர்களை பார்த்தபோது, எங்களுக்கு சந்தேகம் வந்தது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் சங்கடமான உணர்வில் இருந்தனர். அவர்களை பற்றிய விவரங்களை நாங்கள் தொடர்ந்து கேட்கத் தொடங்கியதும் வீட்டில் இருந்து வெளியேறுவதிலேயே குறியாக இருந்தனர்.

    ஜாக்கிரதையா இரு

    ஜாக்கிரதையா இரு

    பிறகுதான் போனில் பணம் கேட்கத் தொடங்கினர். சந்தேகம் அடைந்து போலீசில் புகார் கொடுத்த பின், எனக்கு மிரட்டல் வரத் தொடங்கியது. 'வீட்டுல இருந்து வெளியதான வரணும்..அப்ப பார்க்கிறோம். சிறந்த நடிகைன்னு நினைச்சுட்டிருக்கியா? மேடைகள்லயும் நிகழ்ச்சி நடத்தறல்ல. எங்ககிட்ட ஜாக்கிரதையா இரு. எல்லாம் முடிஞ்ச பிறகு அழுது பயனில்லை' என்ற வாய்ஸ் மெசேஜ் வந்தது. பிறகு போலீசுக்கு சென்றால் அவ்வளவுதான் என்றும் மிரட்டல்கள் வந்தன.

    எச்சரிக்கையாக இருங்கள்

    எச்சரிக்கையாக இருங்கள்

    இதுபோன்று வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் புகார் கொடுத்தேன். இப்போது பலர் இவர்களால் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் வெளியே வருகின்றன. சினிமா, ஃபேன்டஸி உலகம். இங்கு பலர் உங்களை தொடர்பு கொள்வார்கள். போட்டோஷூட் நடத்தலாம், வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலரும் வருவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    சினிமா வாய்ப்பு

    சினிமா வாய்ப்பு

    பல இளம் பெண்கள் கொச்சிக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடுகிறார்கள். அறைகளில் தங்கிக்கொண்டு தங்கள் சினிமா கனவுக்கு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் அட்வைஸ் என்னவென்றால், யார் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொன்னாலும், நீங்கள் எஸ் என்று சொல்லும் முன், அந்த நபர் பற்றி விசாரியுங்கள். உங்கள் நண்பர்கள், தோழிகள் மூலமாக விசாரித்து தெரிந்தபின் எந்த முடிவையும் எடுங்கள் என்று கூறியுள்ளார்.

    English summary
    Actress Poorna advice to newcomers, 'Be alert against con gangs'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X