என்னது ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டாரா? ரசிகர்கள் விளாசல்.. உடனடியாக மாற்றிய பியர் கிரில்ஸ்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பாலிவுட் சூப்பர்ஸ்டார் என தனது ட்வீட்டில் பியர் கிரில்ஸ் தவறாக குறிப்பிட்டுள்ளதை கோலிவுட் ரசிகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
உடனடியாக அதை அறிந்த பியர் கிரில்ஸ் தனது ட்வீட்டை நீக்கி விட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என மாற்றிவிட்டார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து Man vs Wild நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் வன விலங்கு சரணலாயத்தில் நேற்று அதன் ஷூட்டிங் நடைபெற்றது.

புதிதல்ல
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Man vs Wild நிகழ்ச்சியில் நடிகர்கள் பங்கு பெறுவது ஒன்றும் புதிதல்ல. ஹாலிவுட் நடிகர்களான சானிங் டாட்டம், கேப்டன் மார்வெல் நடிகை பிரை லார்சன், காரா டெலிவிக்னே, டேவ் படிஸ்டா போன்ற பல பிரபலங்கள் பியர் கிரில்ஸின் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் Man vs Wild நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இந்நிலையில், பிரதமர் மோடியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பியர் கிரில்ஸுடன் பந்திப்பூர் காட்டுப் பகுதியில் சாகச நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பியர் கிரில்ஸ் ட்வீட்
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் Into The Wild எனும் புதிய ஷோவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என ரஜினிகாந்த் உடன் பியர் கிரில்ஸ் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தற்போது ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். என்னது பாலிவுட் சூப்பர்ஸ்டாரா? என ரசிகர்கள் விளாசியதை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் என பியர் கிரில்ஸ் மாற்றியுள்ளார்.
பாலிவுட் சூப்பர்ஸ்டார்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பாலிவுட் சூப்பர்ஸ்டார் என பியர் கிரில்ஸ் குறிப்பிட்டதை கோலிவுட் ரசிகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும், ரஜினிகாந்த் பாலிவுட் சூப்பர்ஸ்டார் இல்லை என்றும் அவர் இந்திய சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். பியர் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த் நடத்திய சாகச காட்டுப் பயண வீடியோ விரைவில் டெலிகாஸ்ட் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டி.ஆர்.பி எகிறப் போகுது
பிரதமர் மோடியுடன் பியர் கிரில்ஸ் நடத்திய Man vs Modi நிகழ்ச்சி உலகம் முழுக்க 3.6 பில்லியன் டிஜிட்டல் பார்வைகளை பெற்றுள்ள நிலையில், அதை விட அதிகமான டி.ஆர்.பி. ரேட்டிங் சூப்பர்ஸ்டாரின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கு வரும் என ரஜினி ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











