டாடா காட்டிய காதலி... நிச்சயத்தோடு நின்று போன திருமணம்.. விரக்தியில் வில்லன் நடிகர்!
சென்னை: பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ அண்மையில் தனது காதலியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் விரைவில் திருமணத் தேதியை அறிவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திருமணம் நிச்சயத்தோடு நின்று விட்டதாக அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் நம்மாள் என்ற மலையாளப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து சினிமாவில் நடிகரானார். அதைத் தொடர்ந்து, சால்ட் அண்ட் பெப்பர், சாப்டர்ஸ், 5 சுந்தரிகள், வினோத் அக்கா சூண்டா, டா தடியா என அடுத்தடுத்த படத்தில், வில்லன், குணச்சித்திர நடிகர், கதையின் நாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பெயர் எடுத்தார்.

நடிகர் ஷைன் டாம் சாக்கோ: மலையாள படத்தில் மட்டும் வந்த ஷைன் டாம் சாக்கோ, தமிழில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் தீவிரவாதியாக நடித்திருந்தார். அந்த படத்தை சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்த போது, அவரும் தனது பக்கு விஜயை கிண்டலடித்திருந்தார். அது சர்ச்சை ஆனதைத் தொடர்ந்து பின் அதற்காக மன்னிப்பும் கேட்டார். அதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார். பின் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா படத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார்.
மாடல் அழகியுடன் காதல்: 40 வயதான நடிகர் ஷைன் டாம் சாக்கோவிற்கு தபீதா மேத்யூஸ் என்கிற மனைவியும் ஒரு அழகான பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரைவிட்டு பிரிந்து தனது நீண்ட நாள் தோழி தனுஜா என்கிற மாடல் அழகியை நிச்சயதார்த்தம் செய்தார். கடந்த ஏப்ரல் மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தப் போட்டோ சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சைன் டாம் சாக்கோ இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவிலிருந்து நீக்கினார். இதனால் இவர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டு விட்டதாக பேசப்பட்டது.
மீண்டும் சிங்கிள்: இந்நிலையில் ஷைன் டாம் சாக்கோ அளித்துள்ள பேட்டியில், தான் இப்போது சிங்கிளாக இருப்பதாக தான் இருக்கிறேன். என்னதான் தான் உண்மையான அன்பு வைத்திருந்தாலும் கூட அந்த உறவை தன்னால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மீண்டும் டேட்டிங் ஆப் பக்கம் கவனத்தைத் திருப்பி பெண் தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். தனக்கு பிடித்தமான பெண்ணை தேர்வு செய்வதிலும் அவர்களை கன்வின்ஸ் செய்வதிலும் நிறைய சவால்களை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











