50 நாட்களை கடந்த பீஸ்ட், கேஜிஎப் படங்கள்.. வசூலில் எவ்வளவு வித்தியாசம் பாருங்க!

சென்னை : பீஸ்ட் மற்றும் கேஜிஎப் சாப்டர் 2 படங்கள் கடந்த தமிழ் புத்தாண்டையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகின.

அடுத்தடுத்த தினங்களில் வெளியான இந்தப் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வித்தியாசப்பட்டுள்ளன.

தற்போது இரு படங்களும் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்துள்ளன. மேலும் ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

 விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி வெளியானது விஜய்யின் பீஸ்ட் படம். கடந்த ஏப்ரல் 13ம் தேதி கோடை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக இந்தப் படம் வெளியானது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த நிலையில், படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆயினும் விஜய்யின் மாஸ் இந்தப் படத்தின் வசூலை உறுதி செய்தது. 200 கோடிகளை தாண்டி படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் படம் 50 நாட்களை திரையரங்குகளில் கடந்துள்ளது.

கேஜிஎப் சாப்டர் 2 படம்

கேஜிஎப் சாப்டர் 2 படம்

இதேபோல யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பீஸ்ட் படத்திற்கு அடுத்தநாள் அதாவது ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎப் சாப்டர் 2 படம் வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை இந்தப் படம் பன்மடங்கு தந்தது. ரசிகர்கள் இந்தப் படத்தின் மேக்கிங்கை கொண்டாடினர்.

1000 கோடி ரூபாய் வசூல்

1000 கோடி ரூபாய் வசூல்

இந்தப் படம் சில நாட்களிலேயே சர்வதேச அளவில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டியது. தொடர்ந்து இந்தப் படம் ஓடிடியில் ரிலீசான நிலையிலும் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது. முன்னதாக 20க்கும் மேற்பட்ட படங்களில் யஷ் நடித்திருந்தாலும் கேஜிஎப் படங்கள் தான் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

பீஸ்ட் வசூல் ரூ.227 கோடி

பீஸ்ட் வசூல் ரூ.227 கோடி

இந்நிலையில் 2 படங்களில் 50 நாட்களை திரையரங்குகளில் கடந்துள்ள நிலையில் பீஸ்ட் படம் இந்த 50 நாட்களில் சர்வதேச அளவில் 227 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 120 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை செய்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய், படக்குழுவினருக்கு தனது வீட்டில் ட்ரீட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

கேஜிஎப் 2 வசூல் ரூ.1235 கோடி

கேஜிஎப் 2 வசூல் ரூ.1235 கோடி

இதனிடையே கேஜிஎப் 2 படம் இந்த 50 நாட்களில் உலகளவில் 1235 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியான நிலையில் விமர்சனங்களிலும் வசூலிலும் இந்தப் படங்களுக்கிடையில் மிகப்பெரிய வித்தியாசம் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X