“பீஸ்ட்“ இசைவெளியீட்டு விழா ரத்து… காரணம் இதுதான்… டென்ஷனான ரசிகர்கள் !

சென்னை : பீஸ்ட் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா மார்ச் 20ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி என பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் ஏப்ரல் 20ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதால், போஸ்ட் புரொக்டக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பீஸ்ட்

பீஸ்ட்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படம் நகைச்சுவை, காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாகும். திலீப் குமாரின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களைப் போல் இப்படத்திலும் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது என்று கூறப்படுகிறது.

இதுதான் கதை

இதுதான் கதை

ஒரு தீவிரவாத கும்பல் ஒரு ஷாப்பிங் மாலை கைப்பற்றிக்கொண்டு அங்கு உள்ள மக்களை பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு அரசாங்கத்தை மிரட்டுகிறது இதிலிருந்து மக்களை விஜய் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதுதான் பீஸ்ட் திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. ஆனால், படம் வெளியில் வந்தால் தான், கதை என்ன என்ற விவரம் நமக்கு தெரியவில்லை.

இசைவெளியீட்டு விழா

இசைவெளியீட்டு விழா

இப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் அரபிக்குத்து பெரிய அளவில் ஹிட்டான நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். பீஸ்ட் திரைப்படத்தின் டீசர் இசை வெளியீட்டு மார்ச் 20ந் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தில் ஆட்டம் போட்டு, அவருக்கான ஸ்டைலில் குட்டி கதை சொல்லுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஐடியா இல்லை

ஐடியா இல்லை

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தை ஏப்ரல் 14ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், படத்தின் போஸ்ட் புரொக்டக்‌ஷன் வேலைகள் இன்னமும் முடியவில்லை என்றும், ஃபைனல் ரெடி செய்து கொடுக்கவே இம்மாத கடைசி ஆகிவிடும் என்றும், இதனால், இசைவெளியீடு நடத்தும் ஐடியா இல்லை என்றும் கூறப்படுகிறது. கொரோனாவின் தாக்கமும் தற்போது அதிகரித்து வருவதால் நிச்சயம் இசை வெளியீட்டுவிழா நடைபெறாது என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X