Beast Box Office Collection Day 2: 100 கோடி கிளப்பில் இணைந்த பீஸ்ட்.. சந்தோஷத்தில் சன் பிக்சர்ஸ்!
சென்னை: பீஸ்ட் திரைப்படத்திற்கு பல இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், நடிகர் விஜய்யின் நடிப்பு மற்றும் ஆக்ஷனை ரசிப்பதற்காகவே மக்கள் கூட்டம் பீஸ்ட் படத்தை பார்க்க படையெடுத்து வருகின்றன.
கேஜிஎஃப் 2 நேற்று வெளியான நிலையிலும், தமிழ்நாட்டில் பீஸ்ட் தான் டாப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷத்தில் சன் பிக்சர்ஸ்
இதுவரை வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூலை முதல் நாளில் பீஸ்ட் திரைப்படம் அள்ளி ரெக்கார்டு படைத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. பண்டிகை நாளான நேற்று மக்கள் குடும்பத்தோடு பீஸ்ட் படத்தை கண்டு ரசித்து வந்த நிலையில், வசூல் ரீதியாக படம் ஹிட் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

வசூலில் சாதனை
சர்க்கார் படத்தின் வசூல் 32 கோடி என கூறப்பட்ட நிலையில், அந்த வசூலை அஜித்தின் வலிமை முறியடித்தது. இந்நிலையில், நேற்று வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வலிமை வசூலை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம் பீஸ்ட் படம் வெறும் 26 கோடி தான் வசூல் செய்துள்ளதாகவும் சில டிராக்கர்கள் கணித்துள்ளனர்.

இரண்டாம் நாள் வசூல்
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் நேற்று கேஜிஎஃப் படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோதியது. இரண்டாம் நாள் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் 18 முதல் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் கலெக்ஷனை பீஸ்ட் படம் அள்ளி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம அடி
பீஸ்ட் திரைப்படம் இந்தியில் ரா எனும் டைட்டில் உடன் வெளியானது. ஆனால், ரா ஆபிஸர் குறித்த எந்த ஆய்வையும் இயக்குநர் நெல்சன் செய்யவில்லை என விமர்சனங்கள் வெளியானது மற்றும் பாலிவுட்டில் சுத்தமாக புரமோஷனே பண்ணாததும் பீஸ்ட் படத்திற்கு பெரிய பின்னடவை ஏற்படுத்தியது. கேஜிஎஃப் 2 54 கோடி ரூபாயை நேற்று இந்தி பெல்ட்டில் கைப்பற்றியது. விஜய்யின் பீஸ்ட் வெறும் 50 லட்சம் மட்டுமே வசூலித்து செம அடி வாங்கி உள்ளது.

100 கோடி கிளப்
முதல் நாளிலேயே உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் 65 முதல் 70 கோடி வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இரண்டே நாட்களில் 100 கோடி கிளப்பில் பீஸ்ட் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பீஸ்ட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை விஜய் ரசிகர்க்ள் கொண்டாடி வருகின்றனர்.

குறையும் தியேட்டர்கள்
பீஸ்ட் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே சமயம் கேஜிஎஃப் 2 படத்திற்கு பாசிட்டிவ் ஆன விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் கேஜிஎஃப் 2 படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. பீஸ்ட் படத்திற்கு தியேட்டர்கள் மற்றும் ஸ்க்ரீன்கள் வரும் திங்கட்கிழமை முதல் அதிக அளவில் குறைந்து விடும் எனக் கூறப்படுகிறது.
Recommended Video

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை
பாக்ஸ் ஆபிஸ் புரட்சி என சன் பிக்சர்ஸ் ட்வீட் போட்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக படம் இத்தனை கோடிகள் வசூலித்துள்ளது என்கிற அறிவிப்பை ஏன் சன் பிக்சர்ஸ் அறிவிக்கவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் குறித்து ஒவ்வொரு டிராக்கர்களும் ஒவ்வொரு விதமாக தகவல்கள் வெளியிட்டு வரும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











