Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
துபாயில் பீஸ்ட் இயக்குநர் நெல்சன் உடன் டூர் அடிக்கும் பிரியங்கா மோகன்.. டிரெண்டாகும் புகைப்படம்!
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.
அடுத்ததாக தலைவர் 169 படத்திலும் பிரியங்கா மோகன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இயக்குநர் நெல்சன் உடன் துபாயில் பிரியங்கா மோகன் டூர் அடித்து வரும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
காத்துவாக்குல ரெண்டு 'ஆங்கர்'… கலாய்த்த மாகாபா...விஜய் டிவியை விட்டு போக முடிவெடுத்த பிரியங்கா
டாக்டர் செல்லம்மா
கடந்த 2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒந்த் கதே எல்லா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா மோகன் அதே ஆண்டு நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரீகரம் எனும் தெலுங்கு படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானார்.
சூர்யா படத்தில்
டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பெண்களின் ஆபாச வீடியோக்கள் வெளியானால் அதற்காக அஞ்சி நடுங்கி தற்கொலை செய்து கொள்ளக் கூடாது, துணிந்து நிற்க வேண்டும் என கிளைமேக்ஸில் இவர் பேசும் வசனங்கள் பாராட்டுக்களை அள்ளி இருந்தன.
டான் க்யூட்டி
டாக்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் செம க்யூட்டாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவியாக நடித்து கலக்கி இருந்தார். ரொமான்டிக் போர்ஷன்கள் டாக்டர் படத்தை விட டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கும் பிரியங்கா மோகனுக்கும் அதிகமாக இருந்த நிலையில் இருவரது கெமிஸ்ட்ரியும் பக்காவாக வொர்க்கவுட் ஆகி இருந்தது.
துபாய் டூர்
டான் படத்தின் FDFS மற்றும் டான் படத்தின் சக்சஸ் மீட் உள்ளிட்டவற்றில் பிரியங்கா மோகனை ஆளையே காணோம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், துபாய்க்கு டூர் அடித்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா மோகன். கீர்த்தி சுரேஷ், விஜே ரக்ஷன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அந்த புகைப்படங்களை பார்த்து கமெண்ட் செய்துள்ளனர். 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை அந்த புகைப்படங்கள் அள்ளி உள்ளன.
நெல்சன் உடன்
நடிகை பிரியங்கா மோகன் தனியாக துபாய்க்கு செல்லவில்லை. இயக்குநர் நெல்சன் மற்றும் அவரது டீம் உடனே துபாய்க்கு டூர் சென்றுள்ளார். நடிகர் விஜய்யிடம் பீஸ்ட் படம் வெற்றி பெற்றால் வெளிநாட்டுக்கு டூருக்கு கூட்டிட்டுப் போவீங்களா என கேட்க, அவர் நான் தனியா போயிடுவேன்னு நெல்சனுக்கு பல்பு கொடுத்தார்.
மனைவி பகிர்ந்த போட்டோ
இந்நிலையில், தனது மனைவி மோனிஷா நெல்சன், பிரியங்கா மோகன், நடிகர் கவின் மற்றும் பீஸ்ட் படத்தின் காமெடி கேங் உடன் துபாயில் சுற்றுலா செய்து வரும் புகைப்படத்தை மோனிஷா நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகிறார். தலைவர் 169 படத்தை எப்போ தான் ஆரம்பிப்பீங்க நெல்சன் ஒரே டூராக அடித்து வறீங்களே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.