மனப்பாடம் பண்ணத ஒப்பிச்சுட்டு போயிடுறேன்.. பிரஸ் மீட்டில் அப்படி பேசிய பீஸ்ட் இயக்குநர்!

சென்னை: பீஸ்ட் படத்தின் தெலுங்கு பிரஸ் மீட் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், கடமைக்காக நடத்தியது போல சென்னையில் பீஸ்ட் பத்திரிகையாளர் சந்திப்பை படக்குழு நடத்தியது.

நடிகர் விஜய் பேட்டியில் மட்டும் கலந்து கொண்ட நிலையில், எந்தவொரு பிரஸ் மீட் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

இயக்குநர் நெல்சன், செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பீஸ்ட் படக்குழுவினர் இந்த பிரஸ் மீட்டில் பங்கேற்றனர்.

பூஜா ஹெக்டேவை புகழ்ந்து

பூஜா ஹெக்டேவை புகழ்ந்து

நடிகர் விடிவி கணேஷ் பேசும் போது, பூஜா ஹெக்டேவை புகழ்ந்து பேசினார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் அவரே சாப்பாடு பரிமாறுவார் என சில விஷயங்களையும் ஷேர் செய்திருந்தார். பீஸ்ட் படத்திற்கு நீங்கள் பாடவில்லையா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அன்று எனக்கு தொண்டை சரியில்லை என ஜோக் அடித்து விட்டு எஸ்கேப் ஆனார்.

பூஜா ஹெக்டே

பூஜா ஹெக்டே

சேலை அணிந்து கொண்டு செம சூப்பரா பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே தமிழில் இது தனக்கு இரண்டாவது படம் என்றும், நிச்சயம் இந்த முறை ரசிகர்களை மகிழ்விப்பேன் என்றும் கூறியிருந்தார். இயக்குநர், நெல்சன், அனிருத் மற்றும் நடிகர் விஜய்யின் ஹார்ட் வொர்க் பற்றி பேசினார்.

வேலை வாங்குவதில் கில்லாடி

வேலை வாங்குவதில் கில்லாடி

பார்க்க காமெடி பீஸ் மாதிரி நெல்சன் ஜோக் அடித்துக் கொண்டு இருப்பார். ஆனால், நிஜத்தில் செம சீரியஸான மனிதர். வேலை வாங்குவதில் கில்லாடி என நெல்சனை பாராட்டினார். செல்வராகவன் நடிப்பில் வெளியாகப் போகும் முதல் படமாக பீஸ்ட் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் தனக்கு சிறப்பாக அமைந்ததாக கூறினார்.

மனப்பாடத்தை மறந்துடுவேன்

மனப்பாடத்தை மறந்துடுவேன்

பிரஸ் மீட் என்பது பெயருக்குத்தான் இருந்தது. பீஸ்ட் படக்குழு இதற்கு வீடியோ எடுத்தே வெளியிட்டு இருக்கலாம். பத்திரிகையாளர்கள் கேள்விக்கு எந்தவொரு பதிலும் யாரும் சொல்லவில்லை. இயக்குநர் நெல்சன் பேசும் போது ஆடியோ லாஞ்ச் ஏன் நடக்கவில்லை எனக் கேட்டதும், மனப்பாடம் செய்ததை பேசி முடித்து விடுகிறேன். இல்லையென்றால், மறந்து விடுவேன் என சொன்ன அவர், விஜய், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், அனிருத், பூஜா ஹெக்டே, செல்வராகவன் மற்றும் பீஸ்ட் டெக்னீஷியன்கள் அனைவர் பற்றியும் பேசிவிட்டு பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X