பெட்ரூமில் இருந்து பால்கனி வரை.. நெல்சன் மனைவி போட்ட வீடியோ.. எங்கே சுற்றுலா செய்கிறார் பாருங்க!

சென்னை: பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தலைவர் 169 படத்தை இயக்குவது உறுதியான நிலையில், சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா நெல்சன் இன்ஸ்டாகிராமில் தனது சம்மர் ஹாலிடேவை கொண்டாடும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

மோனிஷா நெல்சனின் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் நெல்சன்

இயக்குநர் நெல்சன்

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன். விஜய் டிவியில் வேலை பார்த்து வந்த இவர், சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்க நினைத்தார். ஆனால், அந்த படம் டிராப் ஆனது. கோலமாவு கோகிலா வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் டாக்டர் படம் பண்ணி ஹிட் கொடுத்தார்.

மிஸ்ஸான ஹாட்ரிக்

மிஸ்ஸான ஹாட்ரிக்

விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் ஹாட்ரிக் அடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமர்சன ரீதியாக அந்த வெற்றி இயக்குநர் நெல்சனுக்கு கிடைக்கவில்லை. இதனால், ஹாட்ரிக் ஹிட் மிஸ் ஆகி விட்டது. மேலும், பீஸ்ட் படத்தை இயக்குநர் நெல்சன் சொதப்பி விட்டார் என்றும் விஜய்யின் ஸ்க்ரீன் பிரசன்ஸ்க்கு திரைக்கதையை இன்னும் பெட்டராக பண்ணி இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

தலைவர் 169 கன்ஃபார்ம்

தலைவர் 169 கன்ஃபார்ம்

பீஸ்ட் படத்தின் விமர்சனங்கள் படுமோசமாக வந்த நிலையில் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தில் இருந்து நெல்சன் நீக்கப்படுவார் என ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பின. ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினிகாந்தே தனது ட்விட்டர் கவர் போட்டோவை மாற்றினார். அதே போல இயக்குநர் நெல்சனும், தலைவர் 169 படத்தை தனது பயோவில் சேர்த்துக் கொண்டார்.

விருந்து வைத்த விஜய்

விருந்து வைத்த விஜய்

விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை படம் பெற்றுள்ளது என சன் பிக்சர்ஸ் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவித்த நிலையில், நடிகர் விஜய் இயக்குநர் நெல்சன், நடிகை பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பீஸ்ட் படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்து வைத்த புகைப்படம் வெளியாகி டிரெண்டானது.

ஏற்காட்டில் நெல்சன் மனைவி

ஏற்காட்டில் நெல்சன் மனைவி

கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக நடிகைகள் மாலத்தீவு, காஷ்மீர் என டூர் அடித்து வரும் நிலையில், இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா நெல்சன் சேலம் அருகே உள்ள ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். மோனிஷா நெல்சன் ஷேர் செய்துள்ள இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

பெட்ரூமில் இருந்து பால்கனி

பெட்ரூமில் இருந்து பால்கனி

அந்த வீடியோவில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் பெட்ரூமில் இருந்து பால்கனி வழியே இயற்கை அழகை ரசிக்கும் வீடியோ ஒன்றை ஷேர் செய்து ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளார். அழகான கவுன் உடையை அணிந்து கொண்டு அசத்தலாக அந்த வீடியோவில் தனது சுற்றுலாவை என்ஜாய் செய்து வருகிறார்.

வீடியோ எடுத்தது யாரு

வீடியோ எடுத்தது யாரு

இயக்குநர் நெல்சனும் தனது மனைவியுடன் சுற்றுலாவுக்கு சென்றிருப்பாரே என்றும் இந்த வீடியோவை இயக்குநர் நெல்சன் தான் தனது மொபைல் கேமரா மூலம் எடுத்தாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் அடுக்கி வருகின்றனர். தலைவர் 169 படம் தரமாக இருக்க வேண்டும் என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X