பீஸ்ட் இயக்குநருக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக ஒரு சூப்பர் சான்ஸ்.. அவரே போட்ட ட்வீட்டை பாருங்க!

சென்னை: இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உதவி இயக்குநர்களுக்காக ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு இயக்குநராகவும் ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் பணியாற்றி வந்தவர் நெல்சன்.

சிம்புவின் வேட்டை மன்னன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகலாம் என நினைத்த அவருக்கு பல வெற்றி இயக்குநர்களும் ஆரம்பத்தில் சந்திக்கும் தோல்வியே பரிசாக கிடைத்தது.

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

ஆனால், தோல்வி அடைந்து விட்டோமே என துவண்டு விடாமல் தொடர்ந்து போராடி வந்த நெல்சனுக்கு நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கும் ஜாக்பாட் அடித்தது. பிளாக் காமெடியில் தெறி ஹிட் கொடுத்த அந்த படத்தின் வெற்றி அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களையும் பெரிய நடிகர்களையும் இயக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர்

சிவகார்த்திகேயனின் டாக்டர்

விஜய் டிவியில் இருந்தே சிவகார்த்திகேயன் உடன் நல்ல நட்பு இருந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து உருவாக்கிய டாக்டர் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்து இருவரையும் வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டது.

தளபதி படம் பண்ணும் வாய்ப்பு

தளபதி படம் பண்ணும் வாய்ப்பு

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை முடித்த நிலையிலேயே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கும் மெகா வாய்ப்பும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்தது. அடுத்த ஆண்டு சம்மருக்கு பீஸ்ட் படம் வெளியாகி 300 கோடி கிளப்பில் அசால்ட்டாக ஆட்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உதவி இயக்குநர் தேவை

உதவி இயக்குநர் தேவை

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சினிமா கனவோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தி தர விரும்பியுள்ளார். விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள், VFX, Painting, Photography, Communication skills என சினிமா துறைக்கு சம்மந்தமான அறிவும் ஆற்றலும் உள்ள துணை இயக்குநராக முன் அனுபவம் இல்லாத இளைஞர்கள் அப்ளை பண்ணும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்

போலிகளை கண்டு ஏமாற வேண்டாம்

சில இயக்குநர்கள் பெயரில் போலியான அறிவிப்பு வருவதை போல இல்லாமல் இயக்குநர் நெல்சன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே அறிவித்துள்ளதால் team04.cinemagmail.com இந்த இமெயில் முகவரிக்கு ஒரு ரெஸ்யூமை தாராளமாக அனுப்பலாம்.

பீஸ்ட் அப்டேட் தான் வேணும்

பீஸ்ட் அப்டேட் தான் வேணும்

நெல்சனின் ட்வீட்டை பார்த்த உடனே பீஸ்ட் அப்டேட் தான் ஏதோ கொடுத்திருக்காரு என நினைத்து ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளே வந்து பார்த்ஹ்டு ஏமாந்து போயுள்ளனர். எங்களுக்கு பீஸ்ட் அப்டேட் தான் வேண்டும் என தளபதி ரசிகர்கள் இந்த ட்வீட்டுக்கு கீழ் அலப்பறை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X