Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
நெல்சன் சார் கான்சப்டை மாத்துங்க…போரடிக்குது… பீஸ்ட் டிரைலரால் கடுப்பான பேன்ஸ் !
சென்னை : பீஸ்ட் டிரைலரை பார்த்த ரசிகர்கள் நெல்சன் சார் கான்சப்டை மாத்துங்க போரடிக்குது என்று கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்திற்கும் இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இந்தப் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பீஸ்ட்
டிரைலரில்
முகமூடி
அணிந்து
வந்த
வில்லன்
யார்
தெரியுமா...இதோ
நீங்களே
பாருங்க

பீஸ்ட்
பீஸ்ட் படத்தில் விஜய் வீரராகவன் ரோலில் நடித்துள்ளார். சூப்பர் மாலை தீவிரவாதிகள் ஹைஜாக் செய்து உள்ளே இருப்பவர்களை பிணைக் கைதிகளாக வைத்து மிரட்ட உள்ளே இருக்கும் விஜய் அவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படம் ஏப்ரல் 13ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

செல்வராகவன் இல்லை
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து விஜய்யின் ரசிகர்கள் டிரைலரை வைரலாக்கி வருகின்றனர். இந்த படத்தில் செல்வராகவன்தான் வில்லனாக நடிப்பதாக கருதப்பட்டு வந்த நிலையில் படத்தின் டிரைலரில் செல்வராகவன் தீவிரவாதிகளுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு அதிகாரியாக நடித்திருப்பது தெரிய வந்துள்ளது.

வில்லன் யார்
இதனால் பீஸ்ட் படத்தில் வில்லனாக நடித்திருப்பது யார்? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது. அதோடு டிரைலரில் காண்பிக்கப்பட்ட வில்லன் முகமூடி அணிந்து இருந்ததால் அது யார் என்பதை ரசிகர்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

கொஞ்சம் கான்சப்டை மாத்துங்க
டிரைலரைப் பார்த்த ரசிகர்கள் இதுஎன்ன கூர்கா படம் போல மால் ஹைஜாக் படமாக இருக்கு என்றும், கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படத்திலும் இதே போன்று கடத்தல் கான்சப்டுத்தான் என்றும், தொடர்ந்து பீஸ்ட் படத்திலும் இதே கதையா? தொடர்ந்து இதேபோன்று கதையே இல்லாமல் நகைச்சுவையை வைத்து மட்டுமே படம் இயக்குவது எத்தனை நாளைக்கு எடுபடும் என்றும் கொஞ்சம் கான்சப்டை மாத்துங்க நெல்சன் சார் என்று ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர்.