பீஸ்ட் படத்தோட எமோஜி... சிறப்பான எமோஜியால் ரசிகர்கள் ஹாப்பி!
சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் மாஸ் கிளப்பி வருகிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் பத்து தினங்கள் உள்ள நிலையில், தற்போது எங்கு பார்த்தாலும் பீஸ்ட் திருவிழாவாக உள்ளது. ரசிகர்கள் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இடைப்பட்ட நாட்களை கொண்டாடி வருகின்றனர்.

மாஸ் ஹீரோ விஜய்
நடிகர் விஜய் எப்போதுமே மாஸ் ஹீரோவாக காணப்படுகிறார். கடந்த சில வருடங்களில் இவரது ரசிகர்களின் எண்ணிக்கை வானைத் தொடும் அளவில் அதிகரித்து காணப்படுகிறது. அரசியலிலும் இந்த எண்ணிக்கை இவருக்கு மிகவும் அதிகமாக கைக்கொடுத்து வருகிறது. இந்நிலையில் இவர் நடிக்கும் படங்களின் வெற்றியும் சிறப்பாக காணப்படுகிறது.

விஜய்யின் பீஸ்ட் படம்
இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகவும் சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படம் வரும் 13ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட் திருவிழாவிற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர்
இந்நிலையில் இன்று மாலை பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. சிறப்பான வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி இந்த ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. அதிரிபுதிரியான வசனங்களும் படத்தில் உள்ளதை இந்த ட்ரெயிலர் வெளிப்படுத்தியுள்ளது.

பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட்
படத்திற்காக பிரம்மாண்டமான வகையில் ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு கடத்தல் சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விமானப்படை வீரராகவும் விஜய் ட்ரெயிலரில் காணப்படுகிறது. ராணுவ வீரராக துப்பாக்கி படத்தில் விடுமுறைக்கு தனது வீட்டிற்கு வரும்போது தீவிரவாதிகளின் செயல்பாடுகளை முறியடிப்பார்.
Recommended Video

கூர்க்கா படத்தின் காப்பி
அதேபோல இந்தப் படத்திலும் காட்சிகள் உள்ளதாக தற்போது கூறப்படுகிறது. இதேபோல கூர்க்கா படத்தில் வரும் கடத்தல் சம்பவங்களையும் இந்த ட்ரெயிலர் நினைவு படுத்துவதாகவும் விமர்சனங்கள் கூறப்படுகின்றன. இந்நிலையில் படம் வெளியானதும்தான் இந்தக் காட்சிகள் படத்தில் எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து அறியமுடியும்.

பீஸ்ட் படத்தின் எமோஜி
இந்நிலையில் இன்றைய தினம் பீஸ்ட் படத்தின் எமோஜி வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த எமோஜி ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் பீஸ்ட் போஸ் காணப்படுகிறது. தற்போது பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர் ட்ரெண்டிங்காகியுள்ள நிலையில், இந்த எமோஜி அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











