வெளிநாடுகளில் பீஸ்ட் முதல் நாள் வசூல் வேட்டை…இண்டர்நெட்டில் ஸ்பெஷல் அப்டேட்ஸ்

சென்னை - ரிலீஸுக்கு முன்பே வர்த்தகரீதியாக பல சாதனைகள் படைத்தது பீஸ்ட் திரைப்படம். இன்று உலகளாவிய ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். யோகிபாபு செல்வராகவன் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இந்த படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப் குமார்.

பீஸ்ட் திரைப்படம் வர்த்தக ரீதியாக வெளிநாடுகளில் சாதனை படைப்பது ஒருபுறம் இருக்க, படம் இணையதளத்தில் வெளியாகி இருக்கும் நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கலவை விமர்சனம்

கலவை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தொடர் வெற்றிப் படங்களில் நடித்து வரும் விஜய் தொடர் வெற்றி படங்களை இயக்கி வரும் நெல்சன் முதல் முறையாக இணைந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என ஒரு சாரார் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரம் குறையாமல் திருவிழா மனப்பான்மை தொடர்ந்து வருகிறது.

Tamil Rockers Back

Tamil Rockers Back

பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கும் முதல்நாளே முழு படமும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் இல் பல தமிழ் திரைப்படங்களை முதல் நாளே படம் ரிலீஸ் ஆன சில மணி நேரங்களிலேயே வெளியிட்டு வந்தனர். இதற்கு முன்னர் RRR படமும் இணையத்தில் ரிலீஸாவதாக பேசப்பட்டது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் திரைப்படம் இணையத்தில் வெளியானது தெரிந்ததும் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஒரு சாரார் இது வெறும் வதந்தி படம் எந்த இணையத்திலும் வெளியாகவில்லை என சொல்கின்றனர்.

சர்க்காரை மிஞ்சும் என கணிப்பு

சர்க்காரை மிஞ்சும் என கணிப்பு

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சர்க்கார். விஜய் படங்களில் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் முன்னணியில் இருப்பது சர்க்கார் திரைப்படம். இது முதல் நாள் ரூபாய் 33 கோடி ஷேர் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் சர்க்கார் செய்த சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடிக்குமென சொல்லப்படுகிறது. பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாள் ரூபாய் 35 கோடி ஷேர் வசூல் செய்யும் என சினிமாவின் வியாபார நிபுணர்கள் கணிக்கின்றனர். சர்க்கார் பண்டிகை நாளில் வெளியாகி சம்பாதித்ததை பீஸ்ட் திரைப்படம் வேலை நாட்களில் சம்பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

வெளிநாடுகளில் முன்பதிவு

வெளிநாடுகளில் முன்பதிவு

பீஸ்ட் திரைப்படம் வெளிநாடுகளில் முந்தைய அனைத்து தமிழ் திரைப்படங்களின் அட்வான்ஸ் புக்கிங் சாதனைகளை உடைத்து எரிந்துள்ளது. அமெரிக்காவில் $420 k மற்றும் ஆஸ்திரேலியாவில் $225 அட்வான்ஸ் புக்கிங் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இது அஜித் நடித்து வெளியான வலிமை படத்தின் மொத்த டிக்கெட் விற்பனை ஆகும். வலிமை திரைப்படம் அமெரிக்காவில் $408 k மற்றும் ஆஸ்திரேலியாவில் $207 மொத்த டிக்கெட் விற்பனையாகும். இதை விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் முதல் நாலே எட்டி வெளிநாடுகளில் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்த முதல் தமிழ் படமாக உச்சத்தில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X