தளபதி விஜய்யின் வெறித்தனமான ஆட்டம் வெயிட்டிங்.. அரபிக் குத்து போஸ்டரை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

சென்னை: தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலின் லிரிக் வீடியோ நாளை வெளியாகிறது என்கிற அறிவிப்புடன் அட்டகாசமான புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

இன்று மாலை படத்தின் இன்னொரு புரமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

காதலர் தினத்தை முன்னிட்டு அரபிக் குத்து பாடல் நாளை காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் சரவெடி

ஏப்ரல் சரவெடி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏகப்பட்ட பெரிய படங்களுடன் பீஸ்ட் படமும் வெளியாக காத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

அரபிக் குத்து ரெடி

அரபிக் குத்து ரெடி

அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் வெறித்தனமான நடனத்துடன் காதலர் தினத்தை பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் டேவாக மாற்ற அரபிக் குத்து ரெடியாகி விட்டது. அதன் அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

வேறமாறி வெறித்தனம்

வேறமாறி வெறித்தனம்

புட்டபொம்மா பாடலில் நடனமாடிய பூஜா ஹெக்டே தளபதி விஜய்யுடன் இணைந்து வேறமாறி வெறித்தனத்தில் ஆடியுள்ள அரபிக் குத்து பாடல் நாளை வெளியாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள அரபிக் குத்து பாடல் போஸ்டரில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் காஸ்ட்யூம் மற்றும் தோற்றம் ரசிகர்களை கண்ணிமைக்காமல் பார்க்க வைத்து வருகிறது.

புரமோ எப்போ

புரமோ எப்போ

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலின் முதல் புரமோவில் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்யின் வாய்ஸ் இடம்பெற்று இருந்தது. ஆனால், தளபதி விஜய்யின் தரிசனத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என விரும்பி வருகின்றனர். அவர் பங்கேற்கும் இரண்டாவது புரமோ இன்று மாலை வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வெறும் போஸ்டரை மட்டுமே சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ரெக்கார்டுகள் உடையும்

ரெக்கார்டுகள் உடையும்

பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து நாளை வெளியாகவுள்ள நிலையில், வேற லெவல் சாதனையை படைக்க தளபதி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். அரபிக் குத்து பாடல் போஸ்டரே அந்த பாடலை இப்பவே வெளியிடுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு அதிர விட்டுள்ள நிலையில், அரபிக் குத்து நாளை காதலர் தினத்தை மெர்சல் பண்ண காத்திருக்கிறது.

விரலால் சுடும் விஜய்

விரலால் சுடும் விஜய்

பீஸ்ட் படமே துப்பாக்கிகளை மையமாக வைத்து தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பது படத்தின் அறிவிப்பு புரமோவில் இருந்து அதன் டைட்டில் டிசைன் என அனைத்துமே உணர்த்தி வரும் நிலையில், அரபிக் குத்து பாடல் அறிவிப்பு போஸ்டரிலும் விஜய் பூஜா ஹெக்டேவை விரலால் சுடுவது போல நடன அசைவும் அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X