விஜய், சிவகார்த்திகேயன், நெல்சன் மற்றும் அனிருத் சீக்கிரமே இன்னொரு கசகசா ட்ரீட் கொடுக்கப் போறாங்க!
சென்னை: தளபதி விஜய் படங்கள் மட்டுமில்லை ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் என எது வந்தாலும் அது ஒரு ரெக்கார்ட் பிரேக்கிங் மெட்டீரியல் தான்.
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் செல்லம்மா செல்லம்மா பாடல் மற்றும் சோ பேபி பாடல்களுக்கு பண்ண அலப்பறையை விட பல மடங்கு அலப்பறை நிறைந்த வீடியோ உருவாகி வருகிறதாம்.
விரைவில் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை அட்டகாசமான காமெடி வீடியோவுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாத்தி கம்மிங் ஒத்து
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் ஒத்து பாடல்கள் உலகளவில் எந்தளவுக்கு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது என்பதை கடந்த ஆண்டே கண்டு ரசித்தோம். இந்நிலையில், பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

தளபதியின் பீஸ்ட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் அலப்பறை
போதை பொருள் கடத்தல், சிறுமிகள் கடத்தல் என ரிஸ்க்கான சப்ஜெக்ட்டை எடுத்துக் கொண்டு பிளாக் காமெடியில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படைத்து வரும் இயக்குநர் நெல்சன் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் என்னவெல்லாம் அலப்பறை செய்து வைத்திருக்கிறாரோ என்பதை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

கசகசா காமெடி
பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்காக நடிகர் விஜய்யும் ராக்ஸ்டார் அனிருத் ஆபிஸ் வாசலில் காத்திருக்கப் போகிறாரா? சிவகார்த்திகேயன், நெல்சன், அனிருத் மற்றும் விஜய் இணைந்து இன்னொரு கசகசா காமெடி போல ஒரு வீடியோ உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

நியூ இயர் ட்ரீட்
வரும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் மரண கலாய் வீடியோவுடன் இணைந்து வெளியாகி சமூக வலைதளங்களில் விஜய் பட ஃபர்ஸ்ட் சிங்கிள்கள் முன்பு படைத்த சாதனைகளை எல்லாம் முறியடிக்க ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சோஷியல் மீடியா கிங்காக இருக்கும் விஜய் அடுத்த ஆண்டுக்கான அஸ்திவாரத்தையும் நியூ இயரிலேயே போட முடிவு செய்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











