விஜய்யிடம் இருந்து ஜாலியான குத்துப் பாடல்... புத்தாண்டு கொணடாட்டமாக வெளியாகும் பீஸ்ட் பாடல்?
சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே லீட் ரோல்களில் நடித்துள்ள படம் பீஸ்ட்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.
படத்தில் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் பணிகளை முடித்த விஜய்
படத்தில் தனது சூட்டிங் போர்ஷன் மற்றும் டப்பிங் பணிகளை விஜய் முடித்துக் கொடுத்துள்ளார். அவர் வெளிநாட்டிற்கு விடுமுறைக் கொண்டாட்டத்திற்காக செல்வதால் தனது பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் 66ல் கவனம்
இதையடுத்து வெளிநாட்டிலிருந்து வரும் அவர் தனது அடுத்த படமான விஜய் 66 படத்தில் கவனம் செலுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கவுள்ளார். படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு விரைவில் இறுதிப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விரைவில் பாடல் வெளியீடு?
இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் வரும் புத்தாண்டு கொண்டாட்டமாக இந்தப் பாடல் வெளியாகவுள்ளதாக தற்போது கூறப்படுகிறது.

ஜாலியான குத்துப் பாடல்
இந்தப் பாடல் ஜாலியான ஒரு குத்துப்பாடலாக அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக படத்தின் 100வது நாள் சூட்டிங் நிறைவையடுத்து நெல்சன் திலீப்குமார் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தில் விஜய் டிரம்ஸ் வாசித்தபடி இருந்தார்.

வெளியான சிறப்பு போஸ்டர்
மற்றவர்கள் அனைவரும் மற்றொரு இசைக்கருவிகளையும் இசைத்தபடியும் பாடல் பாடியபடியும் இருந்தனர். இதையொட்டி படம் இசை சம்பந்தப்பட்ட படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தற்போது இந்தப் படத்தின் முதல் பாடலுக்கு சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











