"ஆடிய ஆட்டம் என்ன"… ஃபிளாப்பானதா பீஸ்ட்?... ராசியில்லா கூட்டணி.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை : கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் பீஸ்ட். நெல்சனின் கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படம் வெற்றி அடைந்ததால், இந்த படத்தை எதிர்பார்த்து காத்து இருந்தனர் ரசிகர்கள்.
தெலுங்கில் மிகவும் வரவேற்பை பெற்ற பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு என அனைத்து நடிகர்களும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதேபோல விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடலும் ரசிகர்களை துள்ளிகுதித்து ஆட்டம்போட வைத்தது.

அரபிக்குத்து
பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதுமே பாடல் காபி என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர் இணையவாசிகள். இது வழக்கமாக அனிருத்தின் பாடலுக்கு வரும் விமர்சனம் என்பதால், இதை ரசிகர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், இளசு முதல் பெரிசு வரை அரபிக் குத்துக்கு ஆட்டம் போட்டு பாடலை ஹிட்டாக்கினர்.

வேறமாதிரி கதை
அதேபோல டிரைலர் வெளியானதும் என்னடா மால் ஹைஜெக் கதையா ? அப்போ இது கூர்கா படத்தின் கதையா என்று கேட்டு வந்தனர். ஆனால், நெல்சன் டிரைலரில் இருப்பது படத்தின் கதையே இல்லை, பிஸ்ட் வேறமாதிரி கதை, மாஸ் ஆக்ஷன், டான்ஸ் என படம் தரமாக இருக்கும் என்று கூறி விஜய் ரசிகர்களை கூலாக்கினார் .

விஜய்யின் நேர்காணல்
வழக்கமாக விஜய்யின் படம் வெளியாகும் போது, இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால், சில பல பிரச்சனைகள் காரணமாக ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாமல், சன் தொலைக்காட்சியில் விஜய்யின் நேருக்கு நேர் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நேர்காணலில் விஜய் மனம் திறந்து பல விஷயங்களை பேசினார்.

பீஸ்ட் ஃபிளாபா?
இந்நிலையில்,பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியான நிலையில் கலவையான விமர்சத்தை பெற்றுள்ளது. பல நெட்டிசன்ஸ் நெல்சனை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அட்லீ மற்றும் நெல்சன் போட்டோவை பதிவிட்டு Flop Flop என்று பதிவிட்டு வருகின்றனர்.

ஆடிய ஆட்டம் என்ன ?
படம் வெளியாவதற்கு முன்பே என்னென்ன கம்பிகட்டுற கதை எல்லாம் சொன்னீங்க... ஆடிய ஆட்டம் என்ன ? என கலாய்த்து வருகின்றனர். பீஸ்ட் 99.9% தோல்வி என கருத்துக்களை பதிவிட்டு தளபதி ரசிகர்களை ஒரு சில நெட்டிசன்ஸ் டென்ஷனாக்கி வருகின்றனர்.

ராசியே இல்லை
வழக்கமாக விஜய்க்கும் சன் பிக்ஸர்க்கும் ராசியே இல்லை, இவர்கள் இருவரும் இணையும் கூட்டணி படங்கள் எப்போதும் தோல்வியைத்தான் சந்தித்துள்ளது என்று விஜய்யின் ஃபிளாப் படங்களை பட்டியலிட்டுள்ளனர். வேட்டைக்காரன் , சுறா, சர்கார் படங்கள் ஃபிளாப் தற்போது அந்த வரிசையில் பீஸ்ட் திரைப்படம் இணைந்துள்ளது என்றும், நெல்சன் திலீப்குமார் #தலைவர்169 மூலம் தயவு செய்து ஒரு நல்ல படத்தை கொடுங்கள் என நெட்டிசன்ஸ் பதிவிட்டுள்ளனர்.

Beast Disater
அந்த டாக்டர் படமே அவ்வளவு நல்லா இல்லை இரண்டு வருடம் கழித்து தியேட்டர் திறந்தது மற்றும் சுமாராக படம் இருந்ததால் ஒடியது. டாக்டரை விட BEAST ரொம்பவே BEST படம் அதற்கு என்று இப்படி செய்யக்கூடாது. மக்களின் தீர்ப்பு #BeastDisater #BeastMovie இதுவே நியாயம் . என பதிவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











