விஜயகாந்தே கிழிச்சுப் போட்ட கதைய்யா.. ‘பீஸ்ட்‘..நெல்சனை வெச்சு கலாய்க்கும் பேன்ஸ்!
சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தளபதியின் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால், படம் எதிர்பார்த்த அளவு இல்லாததால்,பல நெகட்டிவ் கருத்துக்கள் இணையத்தில் வலம் வருகிறது.

பீஸ்ட்
இந்திய‘ரா‘ பிரிவில் வேலை பார்க்கும் விஜய், ஒரு பிரச்சனை காரணமாக தமிழ்நாட்டில் ஒரு செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார். அப்போது தீவிரவாதிகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த மாலிற்குள் புகுத்து அங்கிருப்பவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, பாகிஸ்தான் தீவிரவாதியை விடுவிக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.
Recommended Video

இது தான் கதை
இந்த மாலிற்குள் இருக்கும் விஜய், அங்கிருக்கும் மக்களை காப்பாற்றுகிறாரா ? தீவிரவாதியை விடுவித்தார்களா ? என்பது தான் படத்தின் கதை. இதில், தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் பேச்சுநடத்தும் அதிகாரியாக செல்வராகவன் நடித்துள்ளார்.

விஜயகாந்தே கிழிச்சுப் போட்ட கதை
பீஸ்ட் படத்தைப்பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் ஒரு ரசிகர், தமிழ்நாட்ல எப்ப கடைசியா தீவிரவாதிய பாத்தீங்க ? எந்த ஹைஜாக் நடந்துச்சு? பாகிஸ்தானுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்னய்யா சம்மந்தம்? விஜயகாந்தே Outdatedன்னு கிழிச்சுப் போட்ட ஸ்கிரிப்ட்ய்யா இது என்று ஒரு ரசிகர் பீஸ்ட் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடுப்பான ரசிகர்கள்
எங்களுக்கு தீவிரவாதிகளை அறிமுகப்படுத்தியது வல்லரசு படம்தான். (ரோஜா எல்லாம் பின்னர்தான் பார்த்தோம்.) வாசிம் என்றால் ஃபாஸ்ட் பவுலர் வாசிம் அக்ரம் என்ற நினைவு மாறி, வாசிம் என்றால் தீவிரவாதி வாசிம்கான் என மனதில் பதிந்தது. அதே பெயர் பல படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி எண்ணற்ற படங்கள் என்பது போல. பீஸ்ட் திரைப்படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர் கோபத்தில் கொந்தளித்துள்ளார்.

லொள்ளுசபாவே பெட்டர்
படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி ஜாலியா ஒரு படம்ன்னு சொன்னாங்க. இது ஜாலியா எடுத்த படம் இல்லை. திரைப்படமா பார்த்தா கூட எந்த பொறுப்புணர்வும் கலை அம்சமும் இல்லாம ஏனோதானோன்னு பண்ணிருக்க ப்ராஜெக்ட். சிரிச்ச நாலு சீன்தான் படம்னா... இதுக்கு லொள்ளுசபா பெட்டர். என கூறியுள்ளார்.

இயக்குநரை குறை சொல் முடியாது
இயக்குநரை குறை சொல்றது இங்க பொருந்தாது. ஏன்னா அடுத்தது தளபதியா? தலைவரான்னு மக்கள் முடிவு பண்ணுவாங்கன்னு விஜய் சொன்னாரு. இந்த கதைய இப்போ இருக்கும் சூழ்நிலைல முழுசா கேட்டுட்டு நடிக்கிறார்னா அது ஒரு தலைவனோட முடிவா இருக்காது. இருக்கவும் கூடாது.


Click it and Unblock the Notifications