அடப்பாவிங்களா...முழுசா 3 ஷோ கூட முடியல...பீஸ்ட் முழு படமும் இணையத்தில் வந்துடுச்சே

சென்னை : பீஸ்ட் படம் ரிலீசாகி, தியேட்டரில் 3 ஷோ கூட ஓடி முடியவில்லை. அதற்குள் முழு படமும் இணையத்தில் வெளியாகி விட்டது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

Beast Movie Review | பீஸ்ட் விமர்சனம் | Yessa ? Bussa ? | Vijay | Pooja | Nelson | Filmibeat Tamil

நெல்சன் திலீப்கு குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் இன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. சென்னையில் பீஸ்ட் FDFS அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்டது. மற்ற பகுதிகளில் காலை 7 மணிக்கு தான் முதல் ஷோ திரையிடப்பட்டது. இந்த படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்ததால், திருவிழா போல் பீஸ்ட் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பீஸ்ட்டால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்

பீஸ்ட்டால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்

இதுவரை வெளியான விமர்சனங்களின் படி பீஸ்ட் படம் சுமார் என்ற விமர்சனத்தையே பெற்றுள்ளது. வழக்கமான நெல்சன் படங்களில் இருப்பது போல் காமெடி நன்றாக உள்ளதாகவும், அதே சமயம் இது விஜய் படம் போல் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் சொதப்பல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களே படத்தை பார்த்து கடும் ஏமாற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

எங்கப்பா அட்லி

எங்கப்பா அட்லி

பீஸ்ட் படத்தை பார்த்த பிறகு நெல்சனுக்கு, அட்லி எவ்வளவு பரவாயில்லை. எங்கப்பா அட்லி, அவரை கூப்பிடுங்கப்பா. அவர் படங்கள் காப்பி அடிப்பதை போல் இருந்தாலும் வரிசையாக விஜய்யை வைத்து மாஸ் வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால் நெல்சன், அதிகம் ஆசை காட்டி, காக்க வைத்து இப்படி ஏமாற்றி விட்டாரே என பலர் புலம்பி வருகிறார்கள்.

அதிர்ச்சியில் படக்குழு

அதிர்ச்சியில் படக்குழு

பீஸ்ட் படம், வலிமை படத்தின் வசூல் சாதனையை முறியடித்து முதல் நாளிலேயே 50 கோடி வரை வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஃபிளாப் ஆகாமல் இருந்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் நொந்து கொண்டிருக்கையில், அடுத்த அதிர்ச்சியாக படம் ரிலீசாகி முழுசாக 3 ஷோ முடிவதற்குள் முழு படமும் இணையத்தில் வெளியாகி விட்டது.

பீஸ்ட்டுக்கு இப்படி ஒரு பிரச்சனையா

பீஸ்ட்டுக்கு இப்படி ஒரு பிரச்சனையா

வலிமை, ஆர்ஆர்ஆர் படங்கள் ரிலீசான அன்று மாலைக்கு மேல் அல்லது அடுத்த நாளே இணையத்தில் வெளியாகின. ஆனால் பீஸ்ட் படம் ரிலீசாகி சில மணி நேரங்களிலேயே இணையத்தில் முழு படமும் வெளியாகி விட்டதால் ரசிகர்களும், படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது படத்தின் வசூலை பாதிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குவைத், கத்தார், தமிழ்நாட்டில் கரூர், கடலூரில் சில தியேட்டர்கள் என பல இடங்களில் பீஸ்ட் ரிலீசாகவில்லை. ரிலீசான இடங்களிலும் பெரிய அளவில் பாசிடிவ் விமர்சனங்கள் இல்லை. இந்த சமயத்தில் பீஸ்ட் படத்திற்கு புதிதாக இப்படி ஒரு பிரச்சனையும் வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X